― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவைகோவையில் கார் கிணற்றில் விழுந்து விபத்து: 3 பேர் பலி.. 

கோவையில் கார் கிணற்றில் விழுந்து விபத்து: 3 பேர் பலி.. 

WhatsApp Image 2022 09 09 at 9.25 .20 AM .jpeg

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு வரும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 பேர் பலியாகினர். 

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ரோஷன்(18) தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில் நண்பர்களுடன் வந்து கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டது. 

தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார், மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்துவிட உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ்(18), விவேக்பாபு(18), நந்தனன்(18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்றவர்கள்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காரையும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களையும் மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version