Home Blog Page 6180

வெங்காய வெங்காயம்!

வெங்காயத்தை நறுக்குகையில்

எம் குலப் பெண்களை அழவிட்டது.
வெங்காயத்தை வாங்குகையில்
எம் இனப் புதல்வர்களை அழவிட்டது.
தமிழா தமிழா!

அழுது தவிக்கின்ற உன்னை
சிரித்திடச் செய்திடவே
வெங்காயத்தைப் பற்றி
பெரியாரிடம் கேட்கச் சொன்னேன்.

நீயோ
வெறுங்கேள்வி கேட்டு என்னை
வெறுப்புறச் செய்துவிட்டாய்!
அரைகுறை அறிவாலே என்னை
அழஅழச் செய்துவிட்டாய்!

அன்று
தமிழகத்துக்கு ஒரு ராஜா-ஜி
இன்று
தம்அகத்துக்கு ஒரு ராஜா-2ஜி

வெங்காயம் வெங்காயம்!

வெளியே பளபளப்பு!
உரிக்க உரிக்க வெற்றுத் தாள்தான்!
பெரியாரின் வெங்காயம் அதுதான்!

அலைக்கற்றை பார்க்கத்தான் பூதம் பூதம்
அதனுள்ளே பார்த்தாலோ போதும் போதும்!
வெங்காயம் வெங்காயம்!

வரலாறு காணாத போராட்டங்கள்!

(குறை கேட்பு எப்படி இருக்கும்? எல்லாம் நம்ம கற்பனைதான்!)

சொல்லுங்க என்ன பிரச்சினை?
ஐயா எம் பொண்ணு எல்.கே.ஜி படிக்கிறா. நேத்திக்கு ஸ்கூல் போக 10 நிமிஷம் லேட்டாயிருச்சு. டீச்சர் 1 ரூபாய் அபராதம் போட்டுட்டாங்கய்யா.
அப்படியா? உடனே நம்ம மாவட்ட செயலாளருகிட்ட சொல்லி, ஸ்கூலுக்கு எதிரா பிரமாண்ட கண்டனக் கூட்டம் நடத்திருவோம். சரி… அப்புறம்..?
எங்க வீட்டு முன்னால சாக்கடை ஒண்ணு இருக்குங்க. அதுல பக்கெட்ல சேருகிற தண்ணிய கொட்டுவோம். இவங்க என்னடான்னா அதுல சிமிண்டு சிலாப் போட்டு சுத்தமா மூடி வெச்சிருக்கிறாங்க. நாங்க அரை கி.மீ நடந்து வந்து கழிவுத் தண்ணிய கொட்ட வேண்டிருக்குங்க…
அட… இவ்ளோ கஷ்டமா? நகராட்சி என்ன செய்யிது. இந்த அராஜகத்த கண்டிச்சி, உடனே மாவட்ட அளவுல நிர்வாகிங்கள வெச்சி ஒரு போராட்டம் நடத்திடுவோம்.

உங்க கோரிக்கை என்ன சொல்லுங்க?
அம்மா… இந்த மாதிரி… நேத்திக்கு எங்க ஊருக்கு வழக்கமா 8.30க்கு வரவேண்டிய பஸ் 8.28க்கே வந்துச்சுங்க. அதுனால எவ்ளோ பேர் கஷ்டப்பட்டாங்க தெரியுமா?
இது தப்பாச்சே! உடனே போக்குவரத்துக் கழக பணிமனை முன்னால போராட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுவோம். கவலப் படாதீங்க.
ரொம்ப நல்லதும்மா. எங்க நகர்மன்றத் தலைவர்ட்ட பேசுறப்போ, இந்த… எதோ… 2ஜி … ஸ்பெக்ட்ரம்… ஊழல்…அது இதுன்னு போராட்டம் பண்ணலாம்னு ஒருத்தர் பேசினாராம்… அதான்… எங்க விஷயத்த என்னத்த கவனிக்கப் போறாங்களோன்னு நெனச்சேன்..
ஐயா… கொஞ்சம் சும்மா இருங்கீங்களா..! ஊழல் அது இதுன்னு…அதெல்லாம் ஒரு விஷயமா? இப்போதான் கூட்டணி அப்டி இப்டின்னு பேசிட்டிருக்காங்க… நீங்க வேற…
..?! சரி சரி… யோவ் பி.ஏ. மீடியாக்கெல்லாம் உடனே அம்மா பேர்ல அறிக்கய ரெடி பண்ணுங்கப்பா!

போட்டிக்கு அருகதை இல்லை



10 அடி என்ன, அடுத்த 10 அடிக்கு பின்னாலும் கூட யாரும் எனக்கு போட்டியா வரமுடியாது. இந்தப் பாதையில நடைபோடுற வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. அதுக்கான வலுவோ, ஆதரவோ உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது. எம் மேல கோபம் உங்களுக்கு ஏன்? போட்டியில தோக்கற மாதிரி தெரிஞ்சாலும், ஜெயிச்சிருவோம். ஏன்னா எப்படி ஜெயிக்கறதுங்கற கலை எங்களுக்கு தெரியும். எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது உங்களுக்கு தெரியாதுங்கறதால நீங்க எம்பேர்ல எரிச்சல் படக்கூடாது. எம்பேர்ல உங்களுக்கு ஏன் எரிச்சல்? இந்தப் பாதையில இப்படி தனியா தெம்பா நடக்கிறது. மீண்டும் மீண்டும் இதே பாதையில தனியா தெம்பா நடை போடுறது… இதுதான் எங்களோட வெற்றி நடை பயணம்

ஊசல் கூட்டாஞ்சோறு!

https://www.dinamani.com/edition/photoonStory.aspx?artid=348995


இந்த ஊசல் சாம்பாரை யார் செய்திருந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது தெரியுமா? இப்படியா வெப்பாங்க! கை வைக்க முடியல… இவ்ளோ நேரம் சாப்டமே… அந்த கூட்டாஞ்சோறும் சரியில்லை…

எல்லாரும் சரியான மடச் சாம்பாருங்க! உங்களத் தவிர யாரும்மா அப்படி சாம்பார் வைக்க முடியும்? கைய வெச்சிட்டீங்க… பிறகு என்ன செய்யறது?!

நமக்கும் ஒரு கோடி உண்டு!



எனக்கும் ஒரு கோடி என்றான் எமகாதகன்.

எப்படி எனக்கேட்டால் சொன்னான்

என் பெயர் புண்ணியகோடி!

நகைப்புக்கு இடம் தரலாம்,

ஆயின்

நகைத்து மகிழும் காலம் இதுவோ?



தினம் ஓர் விலையேற்றம்

தினக்கூலி வாழ்க்கை திண்டாட்டம்!



அப்பனே புண்ணியகோடி,

கேட்டாயடா ஒரு கேள்வி!



நடந்தது நடப்பது நடக்க இருப்பது எல்லாமே

கோடிகளின் கதைதானடா!



உனக்கு மட்டும்தான் கோடி உண்டா?

நம் எல்லோருக்கும் இருக்கிறதே ஒரு கோடி!

 

அது,

அது…



நாமெல்லாம்,

தெருக்கோடி!

நமக்கும் ஒரு கோடி உண்டு!



எனக்கும் ஒரு கோடி என்றான் எமகாதகன்.

எப்படி எனக்கேட்டால் சொன்னான்

என் பெயர் புண்ணியகோடி!

நகைப்புக்கு இடம் தரலாம்,

ஆயின்

நகைத்து மகிழும் காலம் இதுவோ?



தினம் ஓர் விலையேற்றம்

தினக்கூலி வாழ்க்கை திண்டாட்டம்!



அப்பனே புண்ணியகோடி,

கேட்டாயடா ஒரு கேள்வி!



நடந்தது நடப்பது நடக்க இருப்பது எல்லாமே

கோடிகளின் கதைதானடா!



உனக்கு மட்டும்தான் கோடி உண்டா?

நம் எல்லோருக்கும் இருக்கிறதே ஒரு கோடி!

 

அது,

அது…



நாமெல்லாம்,

தெருக்கோடி!

உன்மத்தன் வம்பு

உன்மத்தன் வம்பு!

கமால் பாஷா ஞானம்
டமால் என்றே வெடித்தது
தமிழ் நாட்டின் மானம்
தடால் என்றே கவிழ்ந்தது.

கற்பனைக் கதையிது,
விற்பனைக் கல்ல!
எச்சரிக்கை எச்சரிக்கை!

சொற்போர் எனல் வேண்டாம்
கற்போரே உமக்கு மட்டும்!
எச்சரிக்கை எச்சரிக்கை!

காலை வெளிச்சத்தில்
உதித்த கவிதையிது…
மாலை மயக்கத்தில்
மரித்த மனிதமிலை!

தவமிருந்து பெற்றபிள்ளை
தறுதலையாய் போகுதென்றால்
தாய் இருந்த தவத்தினிலே
தவறெதுவும் இல்லையடா

வரும்லட்சுமி என்றே வசனம்பேசி
வலிந்து அழைப்பான்
வந்தபின்னே வாசல் வழிதிறந்து
ஊர்மேயப் போவான்
வா நீ வா நீ என்றே
வருந்தி அழைப்பான்
வந்தவள் வாசம்கண்டபின்
போ நீ போ நீ என்றே
துரத்தி அடிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை

மஞ்சத்தில் சாய்ந்தவளின்
கெஞ்சல் மொழி கேட்பான்
சரி சரி என்றே தலைசாய்ப்பான்
சரிவு கண்டால்
கா எனச் சொல்லி
கழற்றிடுவான் எச்சரிக்கை!

பாத்திரமோ இருள் வேடம்
பாத்திறமோ பகல் வேடம்
சத்தியமாய் பேசும்மனம்
சத்தியமாய் இல்லையென
நித்தியமாய் கண்டுவிடு
எச்சரிக்கை எச்சரிக்கை

பத்தியமாய் அவருமில்லை
பைத்தியமாய் நாமுமில்லை
வைத்தியமே தேவையடா
வையத்தை வாழ்விக்க!

சத்திரத்துச் சரக்கொன்றை
வித்துவிடத் துடிக்கின்றார்
பத்திரமாய் உம்மனத்தை
வைத்திருங்கள் எச்சரிக்கை!

கத்திக்கத்திக் கதைத்தாலும்
காத்தாமுட்டி கேட்குதில்லை
சொத்துசுகம் எல்லாமும்
சொர்க்கத்தைத் தந்திடுமோ?
எச்சரிக்கை எச்சரிக்கை!

பாப்பான் கேட்பான் என்றே பயத்தால்
விப்பான் விம்முவான்
எச்சரிக்கை எச்சரிக்கை

கறுப்புச் சட்டத்துள் தானாய் நுழைந்து
வெறுப்புச் சாட்டையால் தாயைப் பழிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

கறுப்புக்குள்ளே புகுந்ததாய் எண்ணி
வெளுப்பைத் தொலைத்த வீரன்வரான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

அந்தி வந்த பின்னே
முந்தி மட்டும் தேடும்
சிந்தை தொலைந்த சிறுவன்
வாந்தி எடுத்ததெல்லாம்
சொந்த வார்த்தையல்ல;
நொந்த மனிதன் காட்சி!
ஓய்ந்த மனதின் சாட்சி!

எச்சரிக்கை எச்சரிக்கை
எச்சரிக்கை எச்சரிக்கை!

உன்மத்தன் வம்பு

உன்மத்தன் வம்பு!

கமால் பாஷா ஞானம்
டமால் என்றே வெடித்தது
தமிழ் நாட்டின் மானம்
தடால் என்றே கவிழ்ந்தது.

கற்பனைக் கதையிது,
விற்பனைக் கல்ல!
எச்சரிக்கை எச்சரிக்கை!

சொற்போர் எனல் வேண்டாம்
கற்போரே உமக்கு மட்டும்!
எச்சரிக்கை எச்சரிக்கை!

காலை வெளிச்சத்தில்
உதித்த கவிதையிது…
மாலை மயக்கத்தில்
மரித்த மனிதமிலை!

தவமிருந்து பெற்றபிள்ளை
தறுதலையாய் போகுதென்றால்
தாய் இருந்த தவத்தினிலே
தவறெதுவும் இல்லையடா

வரும்லட்சுமி என்றே வசனம்பேசி
வலிந்து அழைப்பான்
வந்தபின்னே வாசல் வழிதிறந்து
ஊர்மேயப் போவான்
வா நீ வா நீ என்றே
வருந்தி அழைப்பான்
வந்தவள் வாசம்கண்டபின்
போ நீ போ நீ என்றே
துரத்தி அடிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை

மஞ்சத்தில் சாய்ந்தவளின்
கெஞ்சல் மொழி கேட்பான்
சரி சரி என்றே தலைசாய்ப்பான்
சரிவு கண்டால்
கா எனச் சொல்லி
கழற்றிடுவான் எச்சரிக்கை!

பாத்திரமோ இருள் வேடம்
பாத்திறமோ பகல் வேடம்
சத்தியமாய் பேசும்மனம்
சத்தியமாய் இல்லையென
நித்தியமாய் கண்டுவிடு
எச்சரிக்கை எச்சரிக்கை

பத்தியமாய் அவருமில்லை
பைத்தியமாய் நாமுமில்லை
வைத்தியமே தேவையடா
வையத்தை வாழ்விக்க!

சத்திரத்துச் சரக்கொன்றை
வித்துவிடத் துடிக்கின்றார்
பத்திரமாய் உம்மனத்தை
வைத்திருங்கள் எச்சரிக்கை!

கத்திக்கத்திக் கதைத்தாலும்
காத்தாமுட்டி கேட்குதில்லை
சொத்துசுகம் எல்லாமும்
சொர்க்கத்தைத் தந்திடுமோ?
எச்சரிக்கை எச்சரிக்கை!

பாப்பான் கேட்பான் என்றே பயத்தால்
விப்பான் விம்முவான்
எச்சரிக்கை எச்சரிக்கை

கறுப்புச் சட்டத்துள் தானாய் நுழைந்து
வெறுப்புச் சாட்டையால் தாயைப் பழிப்பான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

கறுப்புக்குள்ளே புகுந்ததாய் எண்ணி
வெளுப்பைத் தொலைத்த வீரன்வரான்
எச்சரிக்கை எச்சரிக்கை!

அந்தி வந்த பின்னே
முந்தி மட்டும் தேடும்
சிந்தை தொலைந்த சிறுவன்
வாந்தி எடுத்ததெல்லாம்
சொந்த வார்த்தையல்ல;
நொந்த மனிதன் காட்சி!
ஓய்ந்த மனதின் சாட்சி!

எச்சரிக்கை எச்சரிக்கை
எச்சரிக்கை எச்சரிக்கை!

ஐயாவாங்க..? ஐயா… வாங்க!

https://dinamani.com/edition/photoonStory1.aspx?artid=346035


ஐயா எங்க இதய தெய்வமே! கூட இருக்கறவங்கள பாத்து கத்துங்குங்க தம்பிரானே! ஒரு கும்பல்கிட்டேயிருந்து எனக்கு மிரட்டல் வருது; தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா வரவேண்டியவன் நீதான்னு எம்.ஜி.ஆர் என்கிட்ட, சொல்லிக்கிட்டே இருந்தாருன்னு வடநாட்டு திக் திக் விஜய் பாணில ஒரு ஸ்டேட்மெண்ட் விடுங்க; இல்லன்னா, நேற்று இரவு கனவுல ராஜாஜியும் பெரியாரும் வந்தாங்க; என்னோட ரெண்டு பக்கத்துலயும் நின்னுகிட்டு தோள தட்டி கொடுத்து, உன்னத் தவிர எந்த சக்தியாலும் தமிழகத்த காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்கன்னாது சொல்லுங்க தலைவரே! எத்தனை நாளைக்குதான் நாங்க இப்படியே போஸ்டரையும் கட்டவுட்டையும்… ம்… ம்…. முடியல!

ஐயாவாங்க..? ஐயா… வாங்க!

https://dinamani.com/edition/photoonStory1.aspx?artid=346035


ஐயா எங்க இதய தெய்வமே! கூட இருக்கறவங்கள பாத்து கத்துங்குங்க தம்பிரானே! ஒரு கும்பல்கிட்டேயிருந்து எனக்கு மிரட்டல் வருது; தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா வரவேண்டியவன் நீதான்னு எம்.ஜி.ஆர் என்கிட்ட, சொல்லிக்கிட்டே இருந்தாருன்னு வடநாட்டு திக் திக் விஜய் பாணில ஒரு ஸ்டேட்மெண்ட் விடுங்க; இல்லன்னா, நேற்று இரவு கனவுல ராஜாஜியும் பெரியாரும் வந்தாங்க; என்னோட ரெண்டு பக்கத்துலயும் நின்னுகிட்டு தோள தட்டி கொடுத்து, உன்னத் தவிர எந்த சக்தியாலும் தமிழகத்த காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்கன்னாது சொல்லுங்க தலைவரே! எத்தனை நாளைக்குதான் நாங்க இப்படியே போஸ்டரையும் கட்டவுட்டையும்… ம்… ம்…. முடியல!
Exit mobile version