― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! இந்துக்களே இந்து கடைகளில் பொருள் வாங்குங்கள்! காரணம் இதுதான்!

செங்கோட்டையில் மீண்டும் துளிர்த்த கோஷம்..! இந்துக்களே இந்து கடைகளில் பொருள் வாங்குங்கள்! காரணம் இதுதான்!

- Advertisement -
2019ம் வருட விநாயகர் சதுர்த்தி விழாவை நல்லிணக்கத்துடன் கொண்டாடுவோம் என்று உறுதி கொடுத்திருந்தார்கள் இஸ்லாமியர்கள்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா பலத்த பாதுகாப்புக்கு இடையில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் போலீஸார் மிகவும் கவனம் எடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் செய்த சதியின் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவில் பதற்றம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், நேரடியாகக் களத்தில் இறங்கினார். காவல் துறை பெரும் சிரமத்தை சந்தித்து, அமைதி கொண்டுவர பாடுபட்டனர். மதுரை தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் செங்கோட்டை பகுதியிலேயே முகாமிட்டு, மேலும் பதற்ற நிலை ஏற்படாமல் விநாயகர் சிலைகள் கரைக்கப் படுவது வரை உடன் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

2018ம் வருட விநாயக சதுர்த்தி விழாவில் விநாயகர் அழைப்பின் போது வீரவிநாயகர் சிலை மீது இஸ்லாமியர் தரப்பினர் கல் எறிந்து கலவரத்துக்கு வித்திட்டனர்

விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் விநாயகர் அழைப்பு நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் மசூதி இருக்கும் பகுதிக்கு தொடர்பே இல்லாத அதற்கு அடுத்த தெருவின் வழியே வீர விநாயகர் ஊர்வலம் வந்த போது, இஸ்லாமியர் வீடுகளில் இருந்து திடீரென கற்கள் எறியப் பட்டு, விநாயகர் சிலையின் முகம் சேதமடைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தால், கல்லெறிதலும் வாகனங்கள் சேதமடைந்தலும் என பிரச்னை மூண்டது.

அப்போது செங்கோட்டை நகர இந்துக்கள் ஒரு தீர்மானம் செய்தனர். செங்கோட்டையில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்கள் வாங்க மாட்டோம்; அவர்களுடன் வியாபாரத் தொடர்பு எதுவும் செய்ய மாட்டோம் என்றனர். ஆனால், இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், தங்கள் வியாபாரம் படுத்து விடும் என்று அஞ்சிய இஸ்லாமிய வணிகர்கள், உடனே யாரோ சிலர் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டுவிட்டார்கள், அதை மறந்துவிடுங்கள். நாங்கள் அடுத்த வருடம் விநாயகர் சதுர்த்தியை உலகமே மெச்ச இந்துக்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, கொண்டாடுவோம் என்று உறுதி கூறினர்.

இதற்காக, மாவட்ட நிர்வாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் சத்தியம் செய்வது போல் பேசினர். செங்கோட்டை திமுக., நகர செயலாளரான இஸ்லாமியர் எஸ்.எம்.ரஹீம் என்பவர், வர்த்தக சங்கத்துக்கும் தலைவராக இருப்பதால், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் என அனைத்துத் தரப்பிலும் பேசி, அமைதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்து, உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டு, இணக்கமான சூழலுக்காகப் பேசப் பட்டது.

ஆனால் அவை எல்லாம் வெறும் நடிப்பு என்பது இப்போது வெளிப்பட்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப் பட்ட ஒரு மனுவைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்… செங்கோட்டை நகர் மக்கள்!

இத்தனை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் எடுக்கும் அமைதி முயற்சிகளுக்கு இந்துக்கள் செவிசாய்த்து முழு ஒத்துழைப்பு கொடுக்கும் போது, அந்த ஒன்றையே பலவீனமாக நினைத்து, இந்துக்களின் உரிமையைப் பறிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக் கிறார்கள் எதிர்த்தரப்பினர் என்கிறார்கள் செங்கோட்டை நகர் மக்கள்.

2018ம் ஆண்டு கலவரச் சூழலுக்குப் பின்னர் அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போது

இதற்குக் காரணமானது, எஸ்.எம்.ரஹீம் திமுக., என்ற கட்சிப் பெயரில் ஓர் இஸ்லாமியராக செயல்பட்டு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சிறிது சிறிதாக சுருக்கி, முற்றிலும் தடை செய்யும் யோசனையுடன், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அவருக்கு திமுக., கூட்டணிக் கட்சிகள் என்ற பெயரில், இந்துக்களாக இருந்தும் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.ராமர், கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் எஸ்.மாரியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், இரா வெங்கடேஷ், மதிமுக., மற்றும் தேமுதிக.,வை சேர்ந்த மேலூர் ஜமா அத் பொறுப்பாளர் காதர் ஒலி ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். திமுக., கம்யூ., காங்கிரஸ் இம்மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு, இது ஏதோ அனைத்துக் கட்சியினரின் கோரிக்கை என்பது போல் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்து இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

செங்கோட்டை நகரிலும் சுற்றுப் பகுதியிலும் சலீம் பேக்கரி எனும் பெயரில் பேக்கரி கடைகளை நடத்தி வருபவர் எஸ்.எம்.ரஹீம். கடந்த வருடமே தங்கள் பகுதியில் வணிகம் படுத்துப் போனதால், இணக்க சூழலை முன்வைத்து இந்து சமுதாயப் பிரமுகர்களிடம் நட்பு ரீதியில் பேசிவிட்டு, இப்போது தமது உள்ளார்ந்த புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் இந்து இயக்கங்களைச் சார்ந்தவர்கள்.

இவர்கள் கட்சி ரீதியாகக் கையெழுத்திட்டு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம் இதுதான்…

இந்தக் கடிதம் குறித்து, இந்து இயக்கத்தினர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ள கருத்துகள்…

செங்கோட்டையில் நடக்கவிருக்கும் #விநாயகர்_சதுர்த்தி விழாவினை தடுப்பதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து மனு அளித்துள்ளனர்…

அவர்களின் கோரிக்கைக்கு பதில்கள்….

???? எத்தனை #விநாயகர்_சிலை வைக்க வேண்டும், #எங்கே வைக்க வேண்டும், என தீர்மானிப்பது #நாங்கள்தான் மேற்கண்ட மனுதாரர்கள் இல்லை.

✨ இந்த நாட்டில் #பெரும்பான்மை சமுதாயம் #ஹிந்துசமுதாயம் தான். செங்கோட்டையில் #அனைத்துபகுதியிலும் ஹிந்து சமுதாயத்தினர் இருக்கத்தான் செய்கிறார்கள்…..

✨ கிறிஸ்துமஸ் விழாவிற்கு சாண்டோகிளாஸ் வேடமணிந்து ஊர்வலம் செல்லும் போது #பேண்ட்செட்வாத்தியம் இசைக்கும் போதோ, அல்லது மசூதிகளில் #கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்த போதோ அதிர்வுகள் ஏற்படவில்லையா???

✨ செங்கோட்டையில் நடக்கும் எத்தனையோ #மத ரீதியிலான கூட்டங்களில் #வெளியூர்களிலிருந்து பலர் கலந்து கொள்கிறார்கள். அதெல்லாம் உங்களுக்கு #தெரியாதா?

✨மாற்று மதத்தினர் #தெருமுனை கூட்டத்திலும், #மதப்பிரச்சாரம் செய்யும் போதும், #மத_வெறியைதூண்டும் வகையில் நடந்து கொண்ட போதும், #கண்டித்தீர்களா????

யாருக்காக இந்த நாடகம்??? யார்? எங்கே? வரவேண்டும்? என்ன பேச வேண்டும்? என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு இது #திமுக_கட்சி_கூட்டம்_அல்ல…..

முன்னதாக, 2018ம் ஆண்டில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, ஹிந்துக்கள் ஹிந்துக் கடைகளிலேயே பொருள்களை வாங்குங்கள் என்று சொல்லி நோட்டீஸ் கொடுத்தது இமாலயக் குற்றம் என்று சொல்லி காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

அது தவறு என்றால், ஹிந்துக்கள் வசிக்கும் பகுதியில் மட்டுமே விநாயக சதுர்த்தி கொண்டாடவேண்டும் என்று ஆட்சியருக்கு கோரிக்கை வைப்பதும் தவறுதான்!

இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் ஏதோ ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு குடியேறி, இஸ்லாமியப் பண்டிகைகளின் போது தெரு முழுக்க தோரணம் கட்டி, லைட் போட்டு, பச்சை நிறக் கொடிகளைக் கட்டி, இந்துக்களுக்குப் புரியாத மொழியில் கோஷம் போடுவதும் தவறுதான்! அதைத் தடுக்க வேண்டும் என்று இதுவரை எந்த இந்துவும் ஆட்சியருக்கு மனு கொடுக்கவில்லை!

இந்துக்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியில் ஹலால் முறை கடைகளை வைத்தும், புரோட்டா கடைகளை வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, எந்த இந்துவும் போராட்டம் நடத்தவில்லை! காரணம், இயல்பாக இருக்கும் சகிப்புத் தன்மை!

ஏற்கெனவே இந்த வருடம் செங்கோட்டை பகுதியில் சதுர்த்தி ஊர்வலம நடத்த தடை கோரி, எஸ்டிபிஐ சார்பில் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப் பட்டது. அப்போதும் இஸ்லாமியப் பெரியவர்கள் எவரும் இதனைத் தவறு என்று சொல்லி, தடுக்கவும் இல்லை,எதிர்க்கவும் இல்லை! இந்த நிலையில், பட்டவர்த்தனமாக இப்போது ஆட்சியருக்கு ஒரு கட்சியின் பெயரில் கையெழுத்திட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்…

இந்த நிலையில்தான்.. இவை எல்லாவற்றையும் மீறி இங்குள்ள இந்துக்கள் இப்போது மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்…“இந்துக்கள், இந்துக்களின் கடைகளிலேயே பொருள்களை வாங்குங்கள்”!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version