― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?விண்வெளியில் ஒரு குளியல்! வியப்பைத் தரும் விண்வெளிப் பயணம்!

விண்வெளியில் ஒரு குளியல்! வியப்பைத் தரும் விண்வெளிப் பயணம்!

- Advertisement -
space bath

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் தினசரி வேலைகளான குளிப்பது, இயற்கையின் அழைப்புகளுக்குப் பதிலளிப்பது போன்ற செயல்களைச் செய்வது நமக்கு எளிமையானதாக இருக்கலாம்.
ஆனால், விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு இது சாதாரண விஷயமே இல்லை என்பது தான் உண்மை. காலைக்கடனைக் கழிக்க வாஷ்ரூம் பயன்படுத்துவது, தலைமுடியைச் சுத்தம் செய்யக் குளிப்பது போன்ற அடிப்படை விஷயங்களை எல்லாம் நீங்கள் ஜீரோ அல்லது மைக்ரோ கிராவிடியில் செய்ய நேர்ந்தால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஜீரோ கிராவிட்டியில் குளித்தால் என்னவாகும் தெரியுமா?
இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் கூட, இப்போது இந்த பதிவைப் படித்தவுடன் ஜீரோ கிராவிட்டியில் குளித்தால் என்னவாகும்? அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாகியிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோல், இன்னும் பல வினோதமான எண்ணங்கள் மற்றும் கேள்விகள் உங்கள் மனதில் எழுந்திருக்க வாய்ப்புள்ளது. அதற்கான விடையை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்த பதிவில் உள்ள நிச்சயமாக உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

space3

ISS இல் இருக்கும் மைக்ரோ கிராவிட்டியில் எப்படி வீரர்கள் குளிக்க முடியும்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு வாஷ்ரூம் பயன்படுத்துவது, குளிப்பது போன்ற சுலபமான காரியங்கள் எல்லாம் சற்று வினோதமான செயல்முறைகளைப் பின்பற்றி மட்டுமே செய்து முடிக்க முடியும் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திராத உண்மையாகும். அதுவும், விண்வெளியில் மிதக்கும் ISS இல் மைக்ரோ கிராவிட்டி (1 × 10-6 கிராம்) சூழல் எப்போதும் இருப்பதால், ஸ்டேஷனுக்குள் இருக்கும் பொருள்கள் மிதப்பது போன்ற சூழல் நிலவுகிறது. இதனால் வீரர்கள் குளிக்கும்போது தொந்தரவு ஏற்படுகிறது.

எப்படி ஷாம்பு போட்டு குளிக்கிறோம் என்று வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்.

space1

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர் மேகன் மெக்காத்தர், சமீபத்தில் விண்வெளி வீரர்கள் மைக்ரோ கிராவிட்டியில் எப்படிக் குளிக்கிறார்கள், அவர்களின் தலையை எப்படி ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள் என்பதற்கான முழு விளக்க வை தனது டிவிட்டர் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த பதிவை ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். மைக்ரோ கிராவிட்டி முன்னிலையில் ஒருவரின் தலைமுடியை எப்படி விண்வெளியில் கழுவ வேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

மைக்ரோ கிராவிட்டியில் ஹேர் வாஷ் செய்வது இவ்வளவு கடினமானதா?

விண்வெளி வீரர்கள் மைக்ரோ கிராவிட்டியில் ஹேர் வாஷ் செய்யும் கடினமான வேலையை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள்? என்ற கேள்வி சமீபத்தில் விண்வெளி வீரர் மேகன் மெக்காதர் இடம் கேட்கப்பட்டுள்ளது. இதனால், விண்வெளி வீரர் மேகன் மெக்காதர் சமீபத்தில் ஒரு விளக்க வைப் பகிர்ந்து, அந்த கேள்விக்கான முழு செயல்முறையைச் செய்தே காண்பித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மைக்ரோ கிராவிட்டி சூழலில் அவர் எப்படி தனது தலையைச் சுத்தம் செய்கிறார் என்று வில் முழுமையாக காண்பித்துள்ளார்.

space2

அந்தரத்தில் மிதக்கும் நீர்களை எப்படி பயன்படுத்துவது? விண்வெளியில் மைக்ரோ கிராவிட்டி மற்றும் பூமியின் ஈர்ப்பு பற்றாக்குறை இருப்பதால், குளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீர் தலையில் தெறிக்கப்பட்ட உடனே அவை எல்லா இடங்களிலும் பரவுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் இவை ஈர்ப்பு விசை இல்லாமல், நீர்க்கட்டிகள் போன்ற நிலையில் அந்தரத்தில் மிதக்கும் நிலை உருவாகிறது.

இதனால் விண்வெளி வீரர்கள் குளிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இந்த சிக்கலைத் தவிர்க்க விண்வெளி வீரர்கள் அனைவரும் ஒரு துல்லியமான முறையைப் பின்பற்றி நீரை மிதக்கவிடாமல் கவனமாக பயன்படுத்துகின்றனர்.

விண்வெளியில் பயன்படுத்தப்படும் பிரத்தியேக நோ-ரின்ஸ் ஷாம்புமெக் ஆர்தர் விண்வெளி வீரர்கள் நோ-ரின்ஸ் ஷாம்பு என்று அழைக்கப்படும் ஒரு பிரத்தியேகமான ஷாம்புவை பயன்படுத்துகிறார். இதை தான் விண்வெளி வீரர்கள் அனைவரும் அவர்களின் தலையில் உள்ள முடிகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். முதலில் அந்த ஷாம்புவை பயன்படுத்த அவர் மெக் ஆர்தர் தனது தலைமுடியில் சிறிய அளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறார்.

bath4

தண்ணீர் எங்கும் தப்பி ஓடாமல் இருக்க, அவர் ஒரு டவலை தலைக்கு மேல் வைத்து முடி, அவரின் ஒரு கையை டவல் மீது வைத்து அழுத்தம் கொடுக்கிறார். பின்னர், நீரை கூந்தலில் பரப்பச் சீப்பைப் பயன்படுத்துகிறார்.

பிறகு, மெக்ஆர்தர் நோ-ரின்ஸ் ஷாம்புவைப் பயன்படுத்துகிறார் மற்றும் கூந்தல் வழியாக அதைப் பரப்பச் சீப்புடன் அதே நுட்பத்தை மீண்டும் பயன்படுத்துகிறார். அது முடிந்ததும், ஷாம்புவில் இருக்கும் சோப்பை முடியில் இருந்து வெளியே எடுக்க, அவர் மீண்டும் சிறிதளவு தண்ணீரை டவலுடன் பயன்படுத்தி நன்றாகத் தேய்த்து எடுக்கிறார்.

bath3

பின்னர் மீண்டும் ஒரு முறை சீப்பால் தலையைச் சீவி மிஞ்சியுள்ள நீரை வெளியேற்றி, உலர்ந்த டவலை வைத்து தனது கூந்தலை உலர விடுகிறார்.

வின் முடிவில், விண்வெளி நிலையத்தில் உள்ள ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் எப்படி டவலில் இருந்த தண்ணீரையும், அவருடைய தலைமுடி நீரை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கியுள்ளார். இதில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மீண்டும் எப்படி விண்வெளி நிலையத்தின் தண்ணீர் மீட்பு அமைப்பில் சேர்க்கப்படுகிறது என்பதையும் மெக்ஆர்தர் சேர்த்து விளக்கமளித்துள்ளார்.

bath1

இந்த நீரை, அந்த அமைப்பு எப்படி குடிநீராக மாற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இப்போதைக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பொறியாளர்களால் 70 சதவிகித கழிவு நீரை குடிநீராக மீண்டும் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல், தற்போதிருக்கும் 70 சதவீத விழுக்காட்டைக் குறைந்தபட்சம் 90 சதவிகிதத்திற்கு மேல் மாற்றத் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மெக் ஆர்தர் கூறியுள்ளார். இதற்கும் முன்னர், விண்வெளி நிலையத்தில் குளிக்கும் முறை என்பது இப்போது நீங்கள் பார்த்த செயல்முறையை விடப் பல மடங்கு கடினமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

bath2

இதற்கு முன்னர் இருந்த குளியல் செயல்முறை இன்னும் கடினமானது.. நாசாவின் ஆரம்ப நாட்களில், ஜெமினி மற்றும் அப்பல்லோ பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் ஒரு துண்டு, சோப்பு, ஸ்பாஞ் மற்றும் மிகக் குறைந்த அளவு நீரில் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

பின்னர் 1973 ஆம் ஆண்டில் ஸ்கைலாப் என்ற விண்வெளி நிலையத்தின் போது, ​​ஒரு வகையான ஷவர் இருந்தது, அங்கு விண்வெளி வீரர்கள் சரிந்த குழாயின் உள்ளே சென்று அவர்களின் குளியலைச் செய்து முடிக்க வேண்டும். இந்த செயல்முறையின் போது அவர்களின் கால்களை ஸ்ட்ராப் மூலம் மேலே கட்டிக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

bath

இதில் ஆபத்தும் இருந்தது என்பதே உண்மை அப்போது, விண்வெளி வீரர்கள் வெறும் திரவ சோப்பைப் பயன்படுத்தி மட்டுமே அவர்களின் உடலைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் அந்த பெரிய குழாயை 12 கப் அழுத்தப்பட்ட நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

இது விண்வெளி வீரர்களுக்கு மிகவும் கடினமான ஒரு செயல்முறையாக இருந்தது மற்றும் சற்று ஆபத்தானதாகக் கருதப்பட்டது. ஏனென்றால், பயன்படுத்தப்பட்ட அனைத்து நீரும் சிதறாமல் மீண்டும் உறிஞ்சப்பட வேண்டும்.

space

எதுவும் குழாயை விட்டு வெளியேறாமல் இருந்தால் மட்டுமே பாதுகாப்பானது, அல்லது இது விண்வெளி நிலையத்தில் உள்ள எந்த உபகரணங்களையாவது சேதப்படுத்திவிடும் என்ற அச்சம் அப்போது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் இப்போது இந்த பாதுகாப்பான குளியல் முறையை விண்வெளி வீரர்கள் நமது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பின்பற்றி வருகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version