― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?3 மாசமா சம்பளம் போடல; பசங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டல: பாகிஸ்தான் தூதரின் புலம்பல் ட்வீட்!

3 மாசமா சம்பளம் போடல; பசங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டல: பாகிஸ்தான் தூதரின் புலம்பல் ட்வீட்!

- Advertisement -

‘ பணவீக்கம் காரணமாக, கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், நாங்கள் எத்தனை காலம் அமைதியாக இருந்து வேலை பார்ப்போம் ” என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கேள்வி எழுப்பி செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபரில் பண வீக்கம் கடுமையாக உயர்ந்தது. இதனால் உணவுப் பொருட்கள் விலை இரு மடங்கானது. அத்தியாவசியப் பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்ததால் மக்கள் பெரிதும் கோபத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விலைவாசி இரு மடங்காக அதிகரித்ததால் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பணவீக்கம், பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பின்மை என சுற்றிலும் மக்களுக்கு அடிமேல் அடி விழுந்ததால், பொதுமக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசுப் பணியில் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதனை அரசு உணர மறுக்கிறது என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் எப்படி பாதிக்கப் பட்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில், செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் ஒரு டிவீட் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் இன்று வெளியிட்ட செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் பதிவில்…. முந்தைய வரலாற்று சாதனைகளை உடைக்கும் அளவுக்கு பணவீக்கம் உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், உங்களுக்காக எவ்வளவு காலம் நாங்கள் அமைதியாக அமர்ந்து வேலை பார்ப்போம் என இம்ரான் கான் எதிர்பார்க்கிறார்? பள்ளி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தினால், எங்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளியேற்றப் படுகின்றனர்… என்று குறிப்பிட்டு, இம்ரான் கான் டிவிட்டர் கணக்கையும் டேக் செய்து பதிவிட்டிருந்தார். மேலும், இம்ரான் கானை விமர்சனம் செய்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இன்று இந்த டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானிலும் பதற்றம் தொற்றியது. இதை அடுத்து, அந்தக் குறிப்பிட்ட டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப் பட்டுள்ளது என்றும், இடைப்பட்ட காலத்தில் பதிவிடப்பட்ட டிவீட்கள் எதுவும் தாங்கள் பதிவிடவில்லை என்றும் விளக்கம் கொடுத்து, பழைய டிவீட்கள் எல்லாம் அழிக்கப் பட்டு புதிய விளக்க டிவீட் மட்டும் அதில் இடம்பெற்றது.


இந்நிலையில் ட்விட்டர் சமூக தளத்தில் இந்த விவகாரம் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்த ட்விட்டர் தகவல் குறித்து கருத்து தெரிவித்த பலரும் பாகிஸ்தானை ஒரு பிடி பிடித்தனர். அதில் ஒரு கருத்து…

பாகிஸ்தான் … மத வெறியை மக்கள் மத்தியில் விதைத்து, மதத்தின் பெயராலேயே மக்களின் மூளையை மழுங்கடித்து… ஒரு நாட்டை சுரண்டி ஆள முடியும் என்று காட்டியுள்ள தேசம். இன்று திவால் ஆன ஒரு நாடு! அந்த நாட்டின் செர்பியா நாட்டு தூதரக அதிகாரி போட்டு இருக்கும் ஒரு ட்வீடில், மூன்று மாதமாக தங்களுக்கு சம்பளம் இல்லை – குழந்தைகள் பள்ளியில் இருந்து பணம் கட்டாமல் விரட்டப்பட்டு விட்டனர் என்று பொது வெளியில் பதிவிட்டு, கீழே பிரதமரே எங்களுக்கு வேறு வழியில்லை மன்னிக்கவும் என்றுவேறு எழுதி இருக்கிறார்கள் … – மிகவும் சோகம்.

அந்த நாட்டின் ராணுவம், அவர்கள் நாட்டின் வரிப் பணத்தை எடுத்து காஷ்மீரை மீட்டு விடுவோம் என்று அந்த பரம ஏழையான மக்களிடம் சொல்லி – பல பில்லியன் டாலர் ஆயுதங்களை வாங்கி பெருமைப் படுகிறது .. இதில் பயங்கரவாத இயக்கத்திற்கு பண ஆயுத உதவி வேறு!

பாகிஸ்தான் நாட்டின் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் போட கூட பணமில்லா நிலை ஏற்ப்பட்டு விட்டது .. பாகிஸ்தான் என்கிற நாடு நமது பாரத நாடு விடுதலைக்கு முன்பாக எப்படி ஒரு ஜமின்தார் முறை போல சில பல பணக்கார குடும்பங்களால் சுரண்டப்பட்டு ஆளப்படும் நாடு என்பதை நாம் தெரிந்து கொண்டால்… இந்த நிலைக்காக பாகிஸ்தானின் அப்பாவி மக்களுக்காக நாம் வருத்தப் படுவோம்!

இவர்களுடைய சுயநலம், மற்றும் நம்பவே முடியாத அளவிற்கு அரசு பணத்தைத் திருடுவது அந்நாட்டின் கலாசாரம் ஆகிவிட்டது. ஒரு ராணுவ அதிகாரி -Major General (retd) Syed Mustafa Anwar, the country’s former ambassador to Indonesia, sold the Pakistani embassy building in Jakarta at a throwaway price during 2001-2002. The country’s top graft body went on to add that the illegal sale of the embassy building resulted in a loss of USD 1.32 million to the exchequer. வெளிநாட்டு தூதரக கட்டடத்தை விற்று காசை எடுத்து கொண்டு வந்து விட்டார் .. இன்று வரை அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை… காரணம் அவர் ஒரு ராணுவ ஜெனரல்!

நல்ல எண்ணம் கொண்ட தலைவன் இல்லையென்றால் – நாடு நாசமாகப் போகும் என்பதற்கு பாகிஸ்தானே உதாரணம்!

அந்த நாட்டு பாமர மக்கள் மீது மிகுந்த வருத்தம் நமக்கு இருக்கிறது! அவ்வளவு கடுமையாக உழைக்கிறார்கள்! நமது நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளும் அவர்கள் ஊரில் எந்தவித உபகரணங்களும் இல்லாத ஒரு 100 பழமையான இடங்களில் இருக்கும் வித்யாசத்தை – எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் வேலை செய்யும் வீடியோ காட்சிகளைப் பார்த்தால் நாம் புரிந்து கொள்ளலாம்… அந்த நாடு எப்படி ஒரு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை!

https://www.youtube.com/c/AmazingThingsOfficial/videos

இந்த யூடுப் பக்கத்தில் நிறைய வீடியோ காணப்படுகிறது .. இதுதான் பாகிஸ்தான் பாமர மக்களின் தினசரி வாழ்க்கை!

நம் நாட்டின் பொருளாதாரம் நாசமாக வேண்டும் என்று நம் நாட்டின் பணம் அச்சடிக்கும் இயந்திரத்தை பழைய விலைக்கு வாங்கி, நம் நாட்டுப் பணத்தை அச்சடித்து நம் நாட்டிலேயே சில புல்லுருவிகள் மூலம் உலவவிட்டு குரூரப் புன்னகை புரிந்தவர்களின் மண்டையில் சம்மட்டி அடி அடிக்கும் வகையில்… இப்போது இறைவன் அந்த நாட்டின் பொருளாதாரத்தை திவால் ஆக்கி ஆசி அளித்திருக்கிறான்!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version