― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை? அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை?...

நரகத்தின் வாயில் என கிருஷ்ணர் கூறியது எதை? அதை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் நம் நிலைமை? ஆச்சார்யாள் அறிவுரை!

- Advertisement -

கோபத்தின் தீமைகள்
சங்கரனும் ஹரியும் ஒரு பாடசாலையில் தங்கி சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் இருவரும் வேறு இரண்டு மாணவர்களுடன் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள் அன்று பௌர்ணமி என்பதால் பாடசாலையில் வகுப்புகள் நடக்கவில்லை.

எனவே நண்பர்கள் தங்கள் அறையிலேயே கதை பேசிக்கொண்டிருந்தார்கள் சங்கரன் மட்டும் அறையின் மூலையில் அமர்ந்து சில தினங்களுக்கு முன் ஆசிரியர் நடத்திய காளிதாசனின் ரகுவம்ச காவியத்தைப் வாசித்துக்கொண்டிருந்தான்.

ஹரி தன் நண்பர்களை நோக்கி எலிக்கு பயந்து ஓடும் யானையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா எனக் கேட்டான்

நண்பர்கள் இல்லை என்றனர்

ஹரி சொன்னான் சங்கரன் காண்டாமிருகத்தை போல பருத்து இருக்கிறான் ஆனால் எலிகளைக் கண்டால் உயிர் போகுமளவிற்கு பயப்படுவான் நேற்று மாலை அஷ்வத்த மரத்தடியில் அவன் உட்கார்ந்து இருக்கும் போது எலி சென்றது அவ்வளவு தான் நமது யானை பதறியடித்துக்கொண்டு குதித்து ஓடினான் அப்பொழுது அங்கே இருந்த ஒரு வாழைப்பழத் தோலின் மேல் இவன் கால்வைக்க குப்புற விழுந்தான் அப்போது நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே ஒரு பூகம்பம் ஏற்பட்டது போல் பூமி அதிர்ந்தது பாவம் பூமாதேவி எப்படி தான் இதனை தாங்கி கொண்டாளோ?

சொல்லி முடித்ததும் ஹரி குலுங்க குலுங்க சிரித்த மற்ற நண்பர்களும் சங்கரனை கண்டு சிரித்தனர் அருகில் பேச்சை கேட்ட சங்கர் தனது பொறுமையை இழந்தான் அவன் முகம் சிவந்தது ஹரியைப் பார்த்து கடும் சொற்களால் தூஷித்தான் பலவாறு அவன் திட்ட தொடங்கினான் இதனால் ஹரி அறையை விட்டு வெளியேறினான்

சில நிமிடங்களில் சங்கரனின் மற்ற இரு நண்பர்களும் வேலை நிமித்தம் வெளியில் கிளம்பி விட்டார்கள் எல்லோரும் வெளியேறியவுடன் சங்கரன் ஹரியின் இடத்திற்குச் சென்று அவனது ரகுவம்ச புத்தகத்தை யாரும் காணாதவாறு ஒளித்து வைத்துவிட்டு தனது இருப்பிடத்திற்கு சென்று அமர்ந்துகொண்டான்.

ஹரி உள்ளே நுழைந்தான் வைத்திருந்த இடத்தில் புஸ்தகம் இல்லை என்பதை தெரிந்துகொண்டான் இது சங்கரனின் வேலையாகத்தான் இருக்கும் என்று அவன் ஊகித்தான் சங்கரன் எப்பொழுது வெளியே செல்வான் என்று காத்திருந்தான் சிறிது நேரம் கழித்து கை கால்கள் சுத்தம் செய்துக் கொள்வதற்காக சங்கரன் வெளியே சென்றான் இதுதான் தக்க சமயம் என்று நினைத்த ஹரி சிறிய பாத்திரத்தை நீரை கொண்டுவந்து சங்கரனின் படுக்கையில் ஊற்றி விட்டு சென்றுவிட்டான் சங்கரன் திரும்பி வந்து பார்க்கும்போது ஹரியின் செயலை கண்டு பிடிக்க முடியவில்லை

பக்கத்தில் அறையில் நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இவர்களுடைய ஆசிரியர் இவர்கள் அறையில் நுழைந்தார் உடனே ஹரியும் சங்கரனும் அவரை வணங்கினர் ஆசிரியர் கீழே உட்கார்ந்து கொண்டு அவர்களையும் அமரச் சொன்னார் பிறகு ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.

ஒரு குளிர் காலம் ஒரு இரவு ஒருவன் குளிருக்காக போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் அப்போது கண்களின் அருகே போர்வையின் மேல் ஏதோ ஊர்ந்து செல்வது போலிருந்தது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட மங்கலான வெளிச்சத்திலும் அது ஒரு எலி என்பதை அவனால் கண்டுபிடிக்க முடிந்தது.

உடனே முன்யோசனை ஏதுமின்றி அருகில் வைத்திருந்த தண்ணீர் புட்டியை எடுத்து அதன் மீது வீசி எறிந்தார் எலியின் வாலில் புட்டி தொட்டுக் கொண்டு சென்றது இவன் காலில் விழுந்து உடைந்தது. கண்ணாடி ஜாடி ஆதலால் வலியால் அவன் துடித்தான்

புட்டியில் இருந்த நீரெல்லாம் அவனது படுக்கையில் சிந்த அது ஈரமாகிவிட்டது நாலா பக்கங்களிலும் தேடினால் ஒரு மூலையில் எலி ஓடுவதை கண்டான் அதனை கொன்றுவிட நினைத்து வேகமாக தலையை ஆட்டி வாலைப் பிடித்து விட்டான்.

அவனிடமிருந்து தப்பிக்க எலி அவன் கையை கடித்தது. வலியால் கையை உதற எலி கையிலிருந்து நழுவி ஓடியது

அவன் செய்தது சரியா உங்கள் கருத்து என்ன என்று ஆசிரியர் கேட்டார்

அவன் சரியான முட்டாள்

ஏன் அப்படி சொல்கிறாய் என்றார் ஆசிரியர்

உடனே சங்கரன் எலியை அடிக்க யாராவது கண்ணாடி புட்டியை பயன்படுத்துவார்களா அதற்கு தகுந்த ஆயுதம் அதுவா இல்லவே இல்லை. புட்டியை வீசுவதற்கு முன் தன் மேலேயே விழுந்து தன்னை காயப்படுத்தும் என்பதையும் தொட்டி உடைந்து அதிலிருந்து நீர் தன் படுக்கையை நனைக்கும் அதனால் அன்றைய தூக்கம் கெடும் என்று யோசித்துப் பார்க்க தவறி விட்டான்.

மேலும் எலியைப் பிடிக்க அவன் வாலை பிடித்ததும் மிகவும் தவறு இதனால் கோபமடைந்த எலி அவன் கையை கடித்தது இப்படி வலியச் சென்று அவனை துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டான் என்று சொன்னான் ஹரி

சரியாக சொன்னாய் சங்கரா அவன் செய்த முட்டாள்தனத்தைத் தான் நீயும் செய்திருக்கிறாய் ஹரி உன்னை கேலி செய்யும் போது நீயும் அவனோடு சேர்ந்து சிரித்து விட்டுப் போயிருக்கலாம் இல்லாவிட்டால் நான் குண்டாக தான் இருக்கிறேன் எலிகளை கண்டால் எனக்கு பயம்தான் நேற்று ஒரு எலியை கண்டு பயந்து குதித்து ஓடி கீழே விழுந்ததும் நடந்தது தான் என்று நீ கூறிவிட்டு போயிருக்கலாம் அவன் ஏதோ வேடிக்கை செய்கிறான் என்று நீயும் சிரித்து விட்டு போயிருக்கலாம்

ஆனால் அது உன்னை பாதித்தது எப்படி என்றால் அவன் கேலி செய்ததை நினைத்து ஆத்திரப்பட்டாய் அவனை திட்டி தீர்த்தாய் அதன் பிறகு உன்னால் உன் படிப்பில் கவனம் செலுத்த முடிந்ததா இல்லை உன் கவனம் சிதறியது

நீ அத்துடன் நில்லாமல் அவன் புத்தகத்தையும் ஒளித்து வைத்தாய் உண்மையை நண்பர்களின் நடுவில் ஹரி என்னை அவமானப்படுத்தி விட்டான் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி என்னை வாட்டி வதைத்தது

புட்டியை வீசுவதற்கு முன் அவன் தனது செயலின் விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை அந்த எலியை வைத்து விட வேண்டுமென்று எண்ணம் மட்டும் அவனிடமிருந்தது நீயும் அழித்துக் கொள்வதற்கு முன் எனது கோபத்தின் தீய விளைவுகளை பற்றி நினைத்துப் பார்க்கவில்லை பதிலடி கொடுத்து எப்படியாவது அடையவேண்டும் என்று நினைத்து அவனிடம் ஒரு புத்தகத்தை ஒளித்து வைத்தாய் அதற்கு பழி வாங்க அவன் தண்ணீரைக் கொண்டு வந்து படுக்கையின் மேல் ஊற்றினான்

கோபத்தில் அந்த மனிதன் வாலை பிடித்து தூக்கினான் அதனாலேயே அவன் கையை கடித்தது

உன்னை கிண்டல் செய்த ஹரியின் புத்தகத்தை நீ ஒளித்து வைத்தாய் அதன் விளைவாக உனது படுக்கை ஈரமானது

அந்த முட்டாள் மனிதனைப் போலவே நானும் நடந்து கொண்டிருக்கிறேன் இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது சங்கரன் ஒத்துக்கொண்டான்

ஆசிரியர் : நீ சீக்கிரம் கோபப்பட்டு விடுவாய் என்று எனக்கு தெரியும் இதனை நீ மாற்றிக்கொள்ளவேண்டும் கோபத்திற்கு இடம் கொடுக்கிறானோ அவனுக்கு அது தீங்கை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள் கோபமானது இறைவன் நமக்களித்த பொக்கிஷங்களான பகுத்தறிவும் குணத்தையும் நல்ல நடத்தையும் தற்காலிகம் நம்மிடம் இருந்து அகற்றி விடும் அது மனதைக் குழப்பி அமைதி இழக்கச் செய்துவிடும் சிறிதளவுகூட சந்தோஷத்தை அது கொடுக்காது கோபத்தின் பிடியில் உள்ள ஒருவன் மகிழ்ச்சியோடு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோமா அதனால்தான் கிருஷ்ணர் கோபத்தை நரகத்தின் வாயில்களில் ஒன்று என்று கூறினார்

சங்கரன் கூறினான் நான் கோபத்தை விட்டுவிட்டால் எல்லோரும் என்னை சாது ஏமாளி என்று ஏமாற்றி விடுவார்கள்

ஆசிரியர்: ஒருவன் பொறுமையோடு இருக்க வேண்டுமே தவிர கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது இதனால் யார் எப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் சும்மா இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை தனது கொள்கையில் உறுதியோடு இருந்துகொண்டு அவசியம் ஏற்பட்டால் சிறிது கடுமையை வார்த்தைகளில் காட்டலாம்

அதிகாரி தன் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சோம்பேறிகளாக இருந்து நல்ல வார்த்தைகளை அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை அப்போது கண்டிக்க வேண்டுமாம் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கோபம் வந்தது போல் பாசாங்கு செய்யலாம் ஆனால் மன அமைதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்

சங்கரன் : கோபத்தை அடக்குவது அவசியத்தை நன்கு புரிந்து கொண்டு விட்டேன் இனிமேல் என்னைத் திருத்திக் கொண்டு கோபப்படாமல் இருப்பதற்கு நான் முயற்சிப்பேன் ஆசிரியர் ஹரியை அழைத்தார் சங்கரனை கேலியோ கிண்டலோ செய்ய எந்த ஒரு காரணம் இருக்க வில்லை பொதுவாக தங்கள் குறைகளை கேட்டு கொள்வதற்கோ பலர் முன்னிலையில் அவமானப்படுத்திய யாருக்கும் பிடிக்காது

ஆசிரியர் :நீ செய்த காரியத்தால் சங்கரனுக்கு தகுந்த பதிலடி கொடுத்தான்

ஆம் அந்த ஆத்திரமான வார்த்தைகள் என்னை நோகச் செய்தது இல்லை அதனால் நான் அறையை விட்டு உடனே வெளியேறி விட்டேன்

ஆசிரியர் : சங்கரன் முட்டாள்தனமாக அந்த புத்தகத்தை மறைத்து வைத்தால் அதற்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக நீ நடந்து கொண்ட விதம் முன் யோசனையின்றி செய்யப்பட்ட செயல் தான் நீ அவன் படுக்கையை ஈரமாக்கி விட்டாய் என்பதை சங்கரன் பிறகு உணர்ந்தால் அவன் பதிலுக்கு மீண்டும் உனக்கு ஏதாவது தொந்தரவு கொடுப்பான் மகாபாரத கதை படித்திருக்கிறீர்கள்

துருபதன் இடம் துரோணர் உதவி நாடி சென்றபோது அவரை அவமானப்படுத்தி விட்டான் ஆகையால் துரோணர் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பயிற்சி அளித்த முடித்தபிறகு அர்ஜுனனை கொண்டு துருபதனை சிறைப்படுத்தி அவனது பாதி ராஜ்யத்தை தன்வசப்படுத்திக் கொண்டார்

இதற்கு வஞ்சம் தீர்த்துக்கொள்ள தான் ஒரு வேள்வி நடத்தி அதை அழிக்கவல்ல ஒரு மகனைப் பெற்று கொண்டான் அவன் பெயர் திருஷ்டத்யும்னன் மகாபாரதத்தில் அஸ்வத்தாமன் மடிந்தான் என்று சொன்னபோது சோகத்தில் மூழ்கி ஆயுதங்களை கீழே போட்டு விட்டார் அந்தத் தருணத்தில் திருஷ்டத்யும்னன் அவரை கொன்றுவிட்டான்

பிறகு துரோணரின் மகன் அஸ்வத்தாமன் நடந்ததை அறிந்து தனது தந்தையை கொன்றவனை வெட்டி சாய்த்து பழித் தீர்த்துக் கொண்டான் இப்படி பழிக்கு பழி தீர்த்துக் கொள்வது என்று ஆரம்பித்தால் அதனால் எத்தனை உயிர்கள் பலியாகின என்பதை பார்த்தாயா

ஹரி: இனிமேல் நான் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வேன் யாரையும் புண்படும்படி பேசமாட்டேன்

நீங்கள் இருவரும் இப்போது ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எப்போதும் போல் நண்பர்களாக இருந்து காட்டுங்கள்

அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்னபடி நடந்து கொண்டார்கள் ஒளித்து வைத்திருந்த ஹரியின் புத்தகத்தை சங்கரன் மீண்டும் அவனுக்கு கொடுத்தான் சங்கரனின் படுக்கையை வெயிலில் உலர வைத்துக் கொடுத்தான் ஹரி

கோபத்திற்கு ஒருவன் இடம் கொடுத்தால் அதனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி விடுவான் கிருஷ்ணர் சொன்ன படி அது நரகத்தின் ஒரு வாயிலாகும் எனவே எல்லோருடைய நன்மையின் பொருட்டு நாம் கோபத்திற்கு இடம் கொடுக்கவே கூடாது எப்பொழுதும் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் சந்தர்ப்பவசத்தால் கோபப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது கோபப்பட்டவன் போல் நடிக்க வேண்டுமே தவிர உண்மையாக கோபப்பட்டு நமது மன அமைதியை இழந்து விடக்கூடாது என்று ஆச்சார்யாள் இந்த கதையின் வாயிலாக எடுத்துரைத்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version