― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

டிவிட்டரில் மல்லுக்கட்டும் கஸ்தூரி! 18ல் பாதியென பதிவிட்டதால் போராட முயன்ற திருநங்கையர்!

kasturi

சென்னை: 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி, 18ல் பாதி என திருநங்கைகளுடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கஸ்தூரி வீட்டின் முன்னர் திருநங்கைகள் போராட்டம் நடத்த முயன்றனர்.

தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த அவைத்தலைவரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால், நீதிபதி சுந்தரோ, அவைத்தலைவரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு விதமாக தீர்ப்பு கொடுத்ததால், மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு வழக்கு பரிந்துரைக்கப் பட்டது.

இந்நிலையில், 18 பேரின் தகுதி குறித்த வழக்கில் பாதி செல்லும் என்றும் பாதி செல்லாது என்றும் கருத்தில் கொண்டு, இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார் நடிகை கஸ்தூரி. அதில், “அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.. இரு வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு திருநங்கையரின் படங்களையும் இணைத்திருந்தார்.


இந்தப் படத்தையும் டிவிட்டையும் கண்ட பலரும், கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து, நெட்டிசன்களின் மனம் புண்படுவதை அறிந்து, , அந்தப் புகைப்படத்தை முதலில் நீக்கிய கஸ்தூரி, சிறிது நேரம் கழித்து அந்தப் பதிவையும் நீக்கிவிட்டார். இது குறித்து பின்னர் இரண்டு மூன்று ட்வீட்களாக விளக்கம் கொடுத்தார் கஸ்தூரி. அதில்,

1/2 Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.

2/2 இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன். – என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள கஸ்தூரி வீட்டை நோக்கி திருநங்கையர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் காவலர்கள், அவர்களை செல்லும் வழியிலே தடுத்தனர். இதை அடுத்து கருத்து தெரிவித்த அந்தத் திருநங்கையர், பிரபல நடிகை இவ்வாறு பதிவிட்டது எங்களை கொச்சப்படுத்தும் விதத்தில் உள்ளது என்று கூறினர்.

இந்நிலையில், LATE NIGHT with KASTHURI: காமெடியும் கலாய்ப்பும் கலந்தடிப்பேன். No one spared, no holds barred. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள் , இருதயம் பலவீனமானவர்கள், இதர உறுப்புக்கள் பலவீனமானவர்கள் படிக்க உகந்தவை அல்ல. கண்டிப்பாக பொறுப்பு போராளிகள் தவிர்க்கவும். மற்றவர்கள் சிரிக்கவும்.

இதை pinned tweet டா வச்சும், தெளிவா politically incorrect comedyனு தலைப்பு போட்டாலும், பொறுப்பு போராளிகள் நம்மளை சும்மா விட மாட்டேன்கிறாங்கோ. யாருன்னு போயி பார்த்தா எல்லாரும் ஒரே குரூப்பு. ஹூம் ! I think I will just crawl under a rock today. Sniff ! – என்று இப்போதும் தன்னுடன் ஒரு குரூப் மட்டுமே தொடர்ந்து இம்சைப் படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

முன்னர் திமுக., வினர் கொச்சை மொழிகளில் கஸ்தூரியின் டிவிட்களுக்கு பதில் கருத்து கூறி வந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version