அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது போர்ட்லாண்ட் நகரம். இங்குள்ள மைன் மெடிக்கல் மையத்தில் பணியாற்றும் ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்தனர்.
இப்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர். அந்தக் குழந்தைகளின் புகைப்படத்தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.