பணிக்காக குடும்பத்தை இழக்கலாம்: டிடி அறிவுரை!

சினி நியூஸ் சினிமா
dd - 2026

தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் திவ்யதர்ஷினி.

இவர், தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2014ல், தான் நீண்ட காலமாக காதலித்து வந்த ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தாலும், கணவர் வீட்டாருக்கு, திவ்யதர்ஷினி இரவு வெகு நேரம் கழித்து ஆண் நண்பர்களுடன் சுற்றுவது, குடித்து விட்டு வீட்டுக்கு வருவது போன்றவை பிடிக்கவில்லை.

dd 1 - 2026

இதனால் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும், திவ்யதர்ஷினிக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தன. இதனால், கோபமானார் திவ்யதர்ஷினி. இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர்.

தனித்தனியாக வசித்து வந்தவர்கள், ஒரு கட்டத்தில் கோர்ட் மூலம் விவகாரத்தும் பெற்றனர்.

இந்நிலையில், தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் , வாழ்க்கை குறித்து டிடிபேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது:வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் கூட நம்மை விட்டு பிரிந்து போகலாம். நம்மோடு உறவில் இருக்கும் யார் வேண்டுமானாலும், நம்மை விட்டு விலகிப் போகலாம்.

ஆனால், காலையில் எழுந்து மேக்கப் போட்டுக் கொண்டு, நம்முடைய பணியை பார்க்க செல்லும் நம்முடைய அடையாளத்தை மட்டும் ஒரு நாளும் நாம் இழக்கக் கூடாது. இவ்வாறு திவ்யதர்ஷினி பேசியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.