ஜூவாலா கட்டாவுடனான நெருக்கத்திற்கு விஷ்ணு விஷால் விளக்கம்!

Published:

என் காதல் திருமணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். பேட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் இவர் காட்டும் நெருக்கம் தான் காரணம் என கூறப்படுகிறது. அதேசமயம் இவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இருவருமே சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

756cb9538caf1193aff431c53b65de66 - 2026

இதுப்பற்றி விஷ்ணு விஷால் ஒரு பேட்டியில் கூறியதாவது : உண்மையை சொல்கிறேன், இப்போது காதலுக்கு என் இதயத்தில் இடமில்லை. காதல் என்பது கல்யாணத்தில் முடியும். அது என் வாழ்வில் முடிந்துவிட்டது. என் காதல் திருமணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மனைவியை பிரிந்த பின் ஜூவாலா கட்டாவை சந்தித்தேன். அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளேன்.

e85b5ae4f09ca9051db96f21c7a1c985 - 2026

நேர்மறையான சிந்தனையை உடையவர் அவர். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வைத்துள்ளோம். 18 வயதில் வரக்கூடிய காதல் என்கிற மனநிலையில் நான் இப்போது இல்லை. 35 வயதாகிவிட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

d561af49dd6f9f96518c71e08daaa1f6 - 2026

அனைத்தையும் உணர்ந்த பக்குவப்பட்டவனாக நான் உள்ளேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.அதேசமயம், உண்மை என்னவென்று தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் சிலர் பேசுவது என் மனதை காயப்படுத்துகிறது.

c1996e1a9220e3ad13522724f006acd9 - 2026

ஜூவாலா உடன் நான் இருக்கும் போட்டோவை பதிவிட்டால் உடனே சிலர் தவறான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். என் மனைவியை பிரிய ஜுவாலா கட்டா தான் காரணம் என்கிறார்கள். இன்னும் சிலர் ராட்சசன் படத்தில் அமலாபால் உடன் நான் நெருக்கம் காட்டியதாக சொல்கிறார்கள். எங்கள் பிரிவுக்கு என்ன காரணம் என இவர்களிடம் சொல்லி நான் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img