― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்கேவலமான விஷயத்திற்கு நேரத்தை செலவிடாதீர்கள்: காண்ட் ஆன அனுபமா பரமேஸ்வரன்

கேவலமான விஷயத்திற்கு நேரத்தை செலவிடாதீர்கள்: காண்ட் ஆன அனுபமா பரமேஸ்வரன்

ஃபேவரட் நடிகர்கள் லிஸ்ட்டில் அமீர்கானும், சிரஞ்சீவியும் இடம் பெறுகிறார்கள்

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் 18 பிப்ரவரி 1996 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். தற்போது தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரைப்படத் துறைகளில் வேலை செய்து வருகிறார்.

d6e49b4bf53c62eed80685a69599c4c6

அனுபமா அடிக்கடி கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரிட் பும்ரஹ் உடன் சேர்த்து வைத்து பல இடங்களில் பார்க்கப்பட்டாலும், இவரது நெருங்கிய நட்பை காதலா ? என்றால் அதை அனுபமா மறுத்து வருகிறார். பிரேமம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் அதே கேரக்டரில் நடித்திருந்தார்.


 
அதன் பிறகு பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரது பொழுதுபோக்கு பயணம் செய்தல் மற்றும் நடனம் ஆடுதல் ஆகும். இவரது ஃபேவரட் நடிகர்கள் லிஸ்ட்டில் அமீர்கானும், சிரஞ்சீவியும் இடம் பெறுகிறார்கள்.

 
இவருக்கு மிகவும் பிடித்த ஹீரோயின்கள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆவர். இவருக்கு சவுத் இந்திய உணவுகள் என்றால் மிகப் பிடிக்குமாம். 3 மில்லியன் வரை சொத்து மதிப்பு உள்ளதாக தெரியவருகிறது.

 
சினிமாவில் நடிப்பதற்காக தன்னுடைய கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். தற்போது தமிழில் அதர்வாவுடன் தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான கொடி படத்தின் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது Facebook பக்கத்தை யாரோ ஹக் செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அவர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட Facebook பதிவில் “சில முட்டாள்கள் எனது முகப்புத்தக பக்கத்தை ஹக் செய்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்”.


வழக்கமாகப் பாரம்பரிய உடைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிடும் அனுபமா, அன்று தன்னுடைய முகம் வேறொரு உடலோடு மார்பிங் செய்யப்பட்டுள்ளதைக் கண்டார். மேலும் அந்த படத்திற்குக் கீழ் ‘Swipe Up’ என்று எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட அனுபமா, இது போன்று எடிட் செய்யப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு, அவ்வாறு செய்தவர்களைக் கடுமையாகச் சாடினார்.  

இப்படிப்பட்ட கேவலமான விஷயத்தைச் செய்வதற்காக நேரத்தைச் செலவிட்டவர்களே, உங்கள் வீட்டில் அம்மா மற்றும் சகோதரிகள் யாரும் இல்லையா..? என்று காட்டமாகக் கூறினார். மேலும் உங்களுடைய நேரத்தை இது போன்ற முட்டாள்தனத்தில் செலவிடாமல் உபயோகம் உள்ளதாகச் செலவிடுங்கள் என்று கூறினார். 

https://www.facebook.com/AnupamaParameswaranOnline/photos/a.1440331392956704/2642310879425410/?type=3&theater
 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version