― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்15 நாளுக்குள் ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால்... எச்சரிக்கும் வீரலெட்சுமி!

15 நாளுக்குள் ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால்… எச்சரிக்கும் வீரலெட்சுமி!

0b11f8686aa63fef6932b47188785f09

நடிகை ஜோதிகா தமிழர் வாழ்வியல் களஞ்சியமான தஞ்சைப் பெருவுடையார் கோவில் குறித்து, அவதூறாகவும் அலட்சியமாகவும் பேசியதாகக் கூறி, அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் வீடு முற்றுகையிடப் படும் என்று கூறியுள்ளார் தமிழர் விடுதலைப் படை நிறுவனர் தலைவர் கி.வீரலட்சுமி. 

அவர் வெளியிட்ட அறிவிப்பில்… வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு தமிழ் சினிமா துறையில் பிழைக்க வருவது பின்பு தமிழகத்தின் பூர்வீக குடி தமிழர்களை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது. … பின்பு எங்கள் பண்பாட்டின் அடையாளங்கள் மீது விமர்சனம் செய்வது.இது வட இந்தியாவில் இருந்து வரும் நடிகர்களின் தொடர் கதையாகயுள்ளது.

விஜய் TV ல் ஒளிபரப்பாகிய J F W சினிமா விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நடிகை ஜோதிகா பேசிய பேச்சு மிகுந்த வருத்தம் தருகிறது

தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என ஏதோ தான் மட்டுமே சமூக அக்கறை கொண்டவர் போல் காட்டி கொள்ள பேசிய திமிர் பேச்சு.

இந்த பேச்சிற்காக 15 தினத்திற்குள் நடிகை ஜோதிகா தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்… இல்லையெனில் எமது தலைமையில் தமிழர்முன்னேற்றப்படை நடிகை ஜோதிகா வீட்டை முற்றுகையிடப்படும்.

இப்படிக்கு… கி.வீரலட்சுமி நிறுவனத்தலைவர் தமிழர்முன்னேற்றப்படை. –  என்று தெரிவித்துள்ளார். 
 

Source: Vellithirai News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version