பிரபல நடிகர் ரிஷிகபூர் மரணம்! திரை உலகினர், பிரபலங்கள் இரங்கல்!

Published:

சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர்

நேற்று பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் இறந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4bc84462c422c961834c76d9755caacb - 2026

பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதற்காக நியூயார்க்கில் ஒராண்டு காலம் சிகிச்சை பெற்றார். பின்னர் உடல் நலன் தேறி செப்டம்பர் 2019-ல் இந்தியா திரும்பினார். இந்நிலையில் புதனன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மறைந்த பிரபல ஹிந்தி நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.அப்படத்திற்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் பெற்றார். அதன்பின் பாபி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
acfbb2f7c31639cb468ee78bc72b9d05 - 2026
முதல்படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 1973 முதல் 2000 வரை அமர் அக்பர் அந்தோனி, லைலா மஜ்னு, போல் ராதா போல் போன்ற எண்ணற்ற வெற்றி படங்களை தந்து பாலிவுட்டில் வலம் வந்தார். இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.  பிலிம் பேர் விருதுகள், தேசிய விருதுகள் என குவித்துள்ளர் ரிஷி கபூர்.

அவருடன் பல்வேறு படங்களில் ஜோடியாக நடித்த நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் ரன்பீர் கபூர், இப்போது பாலிவுட்டில் முன்னணி இளம் நாயகனாக வலம் வருகிறார். இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான ‘தி பாடி’ படத்தில் நடித்தது தான் ரிஷி கபூரின் கடைசி படம் ஆகும். இவரின் மறைவு பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

9f5a59877a98228096d089a5e9620b61 - 2026

அடுத்தடுத்து இரண்டு பாலிவுட் பிரபல நடிகர்கள் இறந்துள்ள சம்பவம் பாலிவுட் சினிமாவை மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி கபூர் காலமானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் தான் உடைந்து போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவு நம்ப முடியாதது என்று நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரிஷி கபூரும் நானும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img