December 6, 2025, 12:59 AM
26 C
Chennai

இந்துக்கள் ஏன் இந்து வியாபாரிகளின் கடைகளில் பொருள்களை வாங்க வேண்டும்?!

diwali poster - 2025
செங்கோட்டை போலீஸாரால் நகர இந்துமுன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் படக் காரணமாக அமைந்த போஸ்டர்…

இந்துக் கடையில் பொருள்களை வாங்குங்க… என்பது முழக்கம். அதற்காக செங்கோட்டையில் நகர இந்து முன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் பட்டிருக்கிறார்…

இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஒரு இந்து பெயரில் இயங்குபவர் நக்கலாக சொல்கிறார்.. நேபாளத்தில் பெட்ரோல் வாங்குங்க என்று..!

கேள்வி நன்று. ஆனால் விஷயம் அதுவல்ல…

நான் வியாபாரி இல்லை. வர்த்தகர் இல்லை. ஆனால், என் ஊரில் வியாபாரி நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்…அவர்களுக்கு பேஸ்புக் டிவிட்டர்லாம் தெரியாது.

தென்காசியில் 25 வருடம் முன் ஒரு சைக்கிள் கடையும், ஒரு சிறு ஜவுளிக்கடையும்தான் பேர் பிரபலமாக இஸ்லாமியர்களால் நடத்தப் பட்டது. பின்னாளில், ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் ஹோல்சேல் – மார்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துப் போட்டனர்.

சரி.. அது தப்பில்லை. அவர்கள் வியாபாரம். செய்யட்டும்! ஆனால், மத ரீதியாக சலுகைகளை வழங்கியபோதுதான், இந்து வியாபாரிகள் விழித்துக் கொண்டார்கள். இந்த ஹோல்சேல் ஏஜெண்டுகள், தங்கள் மதத்தின் இஸ்லாமிய சிறு வியாபாரி என்றால், கிரெடிட் நாட்கள் அதிகம் கொடுப்பார்கள். கேஷ் டிஸ்கவுண்ட் கூட 2 பெர்சண்ட் கொடுப்பார்கள். நீங்கள் இந்த ஹோல்சேல் ஏஜெண்டை விட்டு வேறு எங்கும் பொருள் வாங்க முடியாது. நாலைந்து இந்து வியாபாரிகள் சேர்ந்து மொத்தமாக வாங்கி பிரித்துக் கொள்ளவும் இயலாது. அதற்கான ஒற்றுமையோ, பண வலிமையோ சிறு வியாபாரிகளிடம் கிடையாது.

இன்று தென்காசியில் திரும்பிய பக்கமெல்லாம் இஸ்லாமிய வியாபாரிகளின் பெயர்ப் பலகைகள்தான் தொங்குகின்றன. இது ஏதோ ஒரு தென்காசி என்ற சிறு ஊர் என்றில்லை! தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் இதுதான் நிலைமை.

ஒரு நேரத்தில் நம் வணிக சமூகங்களிடையே ஒரு வியாபார நேர்மை இருந்தது. அது சாதிக் குழுக்களுடனான வணிக நேர்மை என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

செட்டியார் சமூகம், நாடார் சமூகம், பிள்ளை சமூகம், அந்தணர் சமூகம் இவர்கள் எல்லாம், குறிப்பிட்ட வியாபாரங்களைத்தான் தேர்ந்தெடுத்து செய்தார்கள். பலசரக்குக் கடை, எண்ணெய் கடை, சிறு மளிகைக் கடை, பெட்டிக்கடை, மருந்துக் கடை, உணவகம் என கடைகளுக்கு ஏற்ப வர்த்தக சமூகம் வளர்ந்தது. இதை நாம் தவறு என்றோ, சாதிக் கட்டு, திமிர் என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. அவரவர் சமூகம்… வளர்ப்பு.

இன்று மால்களும், ஆன்லைன் வர்த்தகமும் ஒரு பேரிடி என்றால், சிறு ஊர்களில் இருக்கும் வணிகர்களுக்கு மத ரீதியான பாகுபாடு அணுகுமுறை, வாழ்வாதாரத்துக்கே வேட்டு வைத்துள்ளது.

நீங்கள் கல்லாப்பெட்டி முன் கணக்கு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தால்… உங்களுக்கு அதன் போக்கு தெரியும். உடனடியாக வேறு தொழில்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பு, வசதி இல்லாத சூழலில் பலர் சொற்ப வருமானத்தை நம்பி… காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். வியாபாரத்தை பராமரிக்கவே இயலாத நிலையில், எங்கனம் விரிவுபடுத்துவதாம்?! மனைவி, குழந்தைகளுக்கு வசதிகளைச் செய்து தருவதாம்?!

இதில், பல ஊர்களில் இருக்கும் வணிக சங்கங்களைப் பாருங்கள். ஊருக்கு ஊர் வணிக சங்கங்கள் இருக்கும். ஒவ்வொரு கடையிலும் காலெண்டர் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அவற்றை எல்லாம் படித்து வாருங்கள்… நாலு பேர் இருந்தால் தலைவர் அல்லது பொருளாளர் என முக்கியப் பொறுப்பில் இஸ்லாமியர்கள் இருப்பார்கள். இதை தன்னிச்சை என்றோ, தவறு என்றோ சொல்ல வரவில்லை! ஆனால், எந்த இந்துவும், மத ரீதியாகவோ, நம்ம சாதிப் பய என்றோ சலுகைகளை செய்ய மாட்டான். ஆனால், இஸ்லாமியர் அப்படி அல்ல! அவர்களின் குழு சேர்த்தலே… தங்கள் மத ஆதிக்கத்தை நிலை நாட்டுவதுதான்!

இவை எல்லாமே ஒவ்வொரு சமூகத்தின் வாழ்க்கை போராட்டம். வெளியில் சொல்ல முடியாத வாழ்க்கைப் போராட்டம். சொன்னால் ஏற்படும் விளைவுகளை அறிந்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் கையறு நிலை!

இஸ்லாமிய வியாபாரி, சலுகைகள் நிறையக் கிடைப்பதால், ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கழிவு கொடுத்து… பரவால்லீங்க… வேண்டாம் என்று வாடிக்கையாளரிடம் சொல்லி விடுவார். ஆனால், இந்து வியாபாரிக்கோ… அந்த ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்தான் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் வருமானமே!

அதனால்தான், இந்து பாரம்பரிய வியாபாரிகளைக் காப்பாற்ற… இப்படி ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்! பிரசாரம் செய்தாக வேண்டும்! (அறநிலையத்துறை கோயில் கடைகள், கோயில் முன்னுள்ள பூ பழ தேங்காய் வியாபாரங்கள் எல்லாம் இந்த வகையில் சேராது. அவை.. அரசியல். அரசியல்வாதிகள்.. கட்சிகள், பினாமி என விரிவடையும்!)

ஆகவே இயன்றவரை இந்துக்களின் கடைகளில் பொருள்களை வாங்கி அவர்கள் வாழ்க்கைக்கு நாம் ஊக்குவிக்க வேண்டும்… சின்னச்சின்ன பொருள்களுக்கெல்லாம் ஆன்லைன் பர்சேஸ் வேண்டாம் என்று சொல்வது… சிறு குறு இந்து வியாபாரிகளின் குடும்பங்களை அழிவில் இருந்து காப்பாற்ற…

செருப்பு கடை, தோல் பொருள் வியாபாரம், சீட் கவர், வாகன ஸ்பேர் பார்ட்ஸ், தையல் என்று சில தொழில்களை இஸ்லாமியரே கைகளில் வைத்திருக்கிறார்கள். மாற்று ஏற்பாடு இல்லாத நிலையில், அல்லது வேறு வழியில்லை என்ற போது, அவர்களிடம் தான் பொருள்களை வாங்க வேண்டும்! அங்கே போய்… அவர்களிடம் பொருள்கள் வாங்காதே என்று நாம் சொல்லவில்லை!

நான் சென்னையில் பொத்தேரி எஸ்.ஆர்.எம். அருகே குடியிருந்தேன். அந்தக் கல்லூரி, பல்கலை.,யில் சேரும் வடமாநில மாணவர்களை நம்பி,நிறைய பீகாரிகள் உள்ளிட்ட வட மாநிலத்தவர் கடைகளைப் போட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சீக்கியர்கள் வாகன உதிரி பாகங்களில் ஈடுபடுவர். பீகாரிகள், வட மாநில மக்களுக்காக பேல்பூரி, சப்பாத்தி கிடைக்க, உணவகங்களை வைப்பார்கள். அங்கே சென்னை புறநகர் பகுதிகளில் இப்போது பாருங்கள்… நெல்லை தூத்துக்குடி குமரி மதுரை என தென் மாவட்ட மக்கள் வைத்திருக்கும் மளிகைக் கடைகள், சிறு சிறு வியாபாரங்களுக்கு போட்டியாக வடமாநிலத்தவரும் அரிசி பருப்பு வியாபாரத்தில் அதிகம் இறங்கிவிட்டார்கள். வாழ்க்கைக்கான அந்த தொழில் போட்டி, ஒரு வித வெறுப்பை மனிதர்களுக்கு இடையே விதைத்துக் கொண்டிருக்கிறது! நிச்சயம் ஒரு நாள் பெரும் பிரச்னை வெடிக்கும்! அப்போது இதன் நீங்கள் இதன் வேர் என்ன என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்!

வட மாநில நபர்கள் அவர்களது மக்களின் கடைகளில்தான் பொருள்களை கூடுமானவரை வாங்குகிறார்கள். மொழி பிரச்னை காரணம் என்பது ஒருபுறம் என்றாலும், தங்கள் மக்கள் என்ற பாசம் காரணம்.

இஸ்லாமியர்களும் கிராமப் புறங்களில் அப்படியே! அருகருகே இந்து, இஸ்லாமியர் என இரண்டு கடை இருந்தால்… இஸ்லாமியர் கடையிலேயே பொருளை வாங்குவார்கள். கூட்டம் இருந்தாலும் சரி… நின்று பார்த்து, நிதானமாக வாங்கிச் செல்வார்கள்.

இன்னும்… எங்கள் செங்கோட்டை பள்ளிவாசல் அருகே உள்ள அதற்கு சொந்தமான கட்டடங்களில் எந்த ஒரு இந்துவுக்கும் கடை நடத்த அனுமதி கிடையாது. அவர்களுக்கு ஜமாத் என்ற ஒற்றுமை அமைப்பு பலமாக இருக்கிறது. ஆனால், இந்துக்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாழும் கீழூரில் ஒரு இஸ்லாமியர் புரோட்டா கடை நடத்த இடம் கொடுக்கப் பட்டுள்ளது. செங்கோட்டை தோசைக்கல் செய்த ஆசாரிமார் இஸ்லாமியராகிவிட்டார்கள். அவர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கின்றன. இஸ்லாமியரின் பேக்கரி கடை பெரிதாக அமைந்திருக்கிறது….

எனவேதான் இந்த முழக்கம் காலத்தின் தேவை…

இந்து வியாபாரிகளை காப்பாற்ற…
கூடுமானவரை…
இந்துக்கள் கடைகளிலேயே பொருள்களை வாங்குங்கள்…

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவதை எந்த இந்துவும் விரும்பமாட்டான். அதை நாம் சொல்லவுமில்லை. இதன் நோக்கம், நம் வியாபாரக் குழுக்களை, வியாபார குடும்பங்களைக் காப்பதற்குத்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories