Monthly Archives: April, 2018

ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத், பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்தாராம்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல அழைத்த பேராசிரியை நிர்மலா கைது!

இதனிடையே நிர்மலா தேவி மீதான புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்த தப்ப முடியாது என ஆளுநர் கூறியுள்ளார்.

யாருக்காக இந்த ஈனச் செயல்?: வழக்கை சிபிஐ.,விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கல்லூரி மாணவிகளை உயர் அதிகாரிகளின் பாலியல் தேவைக்கு இணங்குமாறு, பேராசிரியை நிர்மலா தேவி கூறிய விவகாரத்தில் சிபிஐ., விசாரணை தேவை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

காவி பயங்கரவாதப் பேச்சுக்கு காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்: பாஜக., செய்தி தொடர்பாளர்

முன்னாள் உள்துறை அதிகாரி ஆர்.வி.எஸ். மணி, ‘காவி பயங்கரவாதம்’ என்ற சொற்றொடரை வலியப் புகுத்தி, அதை நிலை நிறுத்துவதற்காக ஐ.மு.கூட்டணி அரசில் சில கோப்புகள் வலியத் தயாரிக்கப் பட்டன என்று பகிரங்கமாகக் கூறியதை நினைவுகூர்ந்த பத்ரா, கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரிவினை அரசியல் பேசுவதை வெளிப்படையாக விமர்சித்தார்.

காவி பயங்கரவாதம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதே இல்லை: மறுக்கும் சிவராஜ் பாடீல்

காவி பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை வடிவமைத்தவர், அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர். அவர்களுடன் மத்திய பிரதேச முதல்வராக இருந்த திக் விஜய் சிங், தன் பங்குக்கு அடிக்கடி அந்த வார்த்தைகளை ஊடகங்களில் சொல்லி வந்தார்.

இனிமேல் ராகுல்காந்திதான் பாட்ஷா! ரஜினிகாந்த் அல்ல: நக்மா

பிரபல நடிகையும் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியுமான நக்மா தற்போது புதுச்சேரியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள சோரப்பட்டு என்ற கிராமத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில்...

ஆளுநரை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., அறிக்கை!

திமுக., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழர் பெயரில் இயங்கும் இயக்கங்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருவதும், ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டு அவரை பதவி விலகச் சொல்வதுமாக அரசியல் நடத்தி வருவதும் அண்மைக் காலமாக தமிழகம் பார்த்து வருகிறது

நீ தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர்: ரஜினியை மீண்டும் தாக்கிய பாரதிராஜா

காவிரி பிரச்சனை சூடுபிடிக்க தொடங்கியதும் திடீர் தமிழ் ஆர்வலராக மாறிய ரஜினி, காவிரிக்காக குரல் கொடுத்ததை விட ரஜினியை எதிர்த்தே அதிகளவில் குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு இதே மாதம் பாரதிராஜா...

மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பேராசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. விருதுநகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மதி இதனைத் தெரிவித்தார்.

பூனை மேல் மதில் போல ஸ்டாலின் போராட்டம்: ஹெச்.ராஜா கிண்டல்!

ஏற்கனவே ஸ்டாலின் மதில் மேல் பூனை என்பதற்கு பதில் பூனை மேல் மதில் என்று கூறியதை தாங்கள் கவனிக்க வில்லையா? அது மட்டுமல்ல பொன்னார் என்பதற்கு பதில் பொன்னர் சங்கர் என்றார். எடப்பாடி க்கு வாழப்பாடி என்றார் இன்னமும் பல. அவர் சொன்னதைக் குறிப்பிட்டேன் - என்று கிண்டல் அடித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் விடுவிப்பு !

இந்நிலையில், குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பில், இவர்களுக்கும் இந்த வழக்கின் தொடர்புக்கும் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Exit mobile version