பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை: செங்கோட்டையன்!

Published:

SENGOTTAIAN - 2026

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கல்வித் துறையில் முதல் மாநிலமாக கேரளாவும், இரண்டாவதாக தமிழகமும் உள்ளன. இந்த ஆண்டும் இதுபோன்ற புள்ளிவிவரங்களை கணக்கிட்டால் தமிழகம்தான் முதலிடம் பிடிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த அளவுக்கு பள்ளிக்கல்விக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். பாடத்திட்டங்களிலும் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை. மேலும், , பள்ளி செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர் நியமனம், தலைமை ஆசிரியருக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தல் ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

எனவேதான் 2018-19-ம் ஆண்டு, 2019-20-ம் ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் தரக்குறியீட்டு அட்டவணையை வெளியிட்டால் அதில் தமிழகம்தான் முதலிடம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் ஊக்கம் அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்தின் பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை. என்று தெரிவித்தார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img