― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபுத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும் கிறித்துவப் பாதிரிகள்!

புத்த சைவச் சிக்கல் தீயில் குளிர்காயும் கிறித்துவப் பாதிரிகள்!

- Advertisement -

பௌத்தமும் கிறிஸ்தவமும் இந்துத் தமிழர்கள் இன அழிப்பு கோர முகங்கள்

மட்டக்களப்பில் காளி கோயில் இருந்த இடத்தில் மசூதியை கட்டியது போலச் செம்மலை நீராவியடியில் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் பல்சாலையைக் கட்டவில்லை.

சிவன் வீற்றிருந்த பாலாவியின் கரைமேல் சிவனை நீக்கி உலூர்தம்மாள் கோயிலைக் கட்டியது போலப் பல்சாலையைக் கட்டவில்லை.

பிள்ளையார் கோவிலை அப்படியே இருக்கவிட்டு அருகே பல்சாலை, தெருவின் எதிர்ப்புறத்தில் மாபெரும் புத்தர் சிலை என அமைத்துள்ளார்கள்.

திருக்கேதீச்சரத்தில் பாலாவியின் கரையில் சிவன் உறைகிறார். தேவாரப் பாடல் சொல்லும் செய்தி இப்பொழுது பாலாவியின் கரைமேல் அடாத்தாக உறைபவர் உலூர்தம்மாள்.

திருக்கேதீச்சரத்தில் தெருவுக்கு எதிரே புத்த கோயில் ஒன்றையும் அமைத்தார்கள். மன்னார்ப் பெருமகன் சிவகரன் சுட்டிக்காட்டிய பின் அவர்களாகவே வேறு இடத்திற்கு போகிறார்கள்.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் பகுதியை நேற்றுச் (24.9) சென்று சிவசேனை மறவன் புலவு க.சச்சிதானந்தம் அய்யா பார்த்ததாக கூறினார்.

“தமிழர் மரபுரிமை அமைப்பு” என்ற பெயரில் முல்லைத்தீவில் போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும், பங்கேற்றதாகவும் கூறினார்.
நடத்தியவர்களுட் பலர் பாதிரியார்கள்.

இந்துக் கோயிலைக் காப்பதற்குப் பாதிரியார்கள் ஏன் வந்தார்கள்? என்ற வினா என் மனதைத் தொடர்ந்து குடைந்து கொண்டே இருக்கிறது.

அவர்கள் எழுதிக்கொடுத்த முழக்கங்களை ஏதுமறியா மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அந்த முழக்கங்கள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த முழக்கங்களை அன்றிச் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோயில் உரிமை பற்றிய முழக்கங்களாக இருந்தவை ஒருசில.

அரசுக்குரிய விண்ணப்ப கடிதத்தைப் போராட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியவர் பாதிரியார்.

அந்தக் கடிதத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயில் சிக்கலையே தனித்துக் கூறாமல் இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கலாம் நியமிக்க கூடாது என்பது போன்ற அரசியல் கருத்துகளை வலியுறுத்தி இருந்தார்கள்.

பின்பு நடந்த செய்தியாளர் மாநாட்டின் முதன்மைப் பேச்சாளராக இருந்தவர் கிறித்தவப் பாதிரியார்.

*சைவர்களையும் புத்தர்களையும் சண்டைக்குத் தூண்டிவிடுகின்ற நோக்கத்தில் பாதிரிகள் நீராவியடிப் பிள்ளையார் கோயில் சிக்கலைப் பயன்படுத்துவது கிறிஸ்தவ சபைகளின் வெறித்தனத்தை; நரித்தனத்தை காட்டியது.

தொண்டீச்சரம் சிவன் கோயில் இருந்த இடத்தில் லூசியா தேவாலயம்,

நல்லூர் முருகன் கோயில் இருந்த இடத்தில் கிறித்தவ தேவாலயம்.

பாலாவியின் கரைமேல் புதிதாக உலூர்தம்மாள் தேவாலயம்,

மன்னார் தள்ளாடியில் தோட்டவெளி சந்தியில் கடந்த ஆண்டில் பிள்ளையார் கோயில்கள் இடிப்பு.

மன்னார் மாவட்டம் முழுவதும் சைவக் கோயில்கள் இருக்கும் இடங்களில் திடீர் திடீர் மரியாள் சிலைகளும்; சிலுவைகளும் அரச நிலங்களில் அனுமதியின்றி எழும்புகின்றன.

பண்டத்தரிப்பில் யாழ்ப்பாண நகரத்தில் சிதம்பரம் திருக்கோயிலுக்கு சொந்தமான காணிகளில் கிறித்தவத் தேவாலயங்கள்.

சைவர்களின் நோக்கிய அந்நிய நிதியிலும் அந்நிய நற்செய்தியாளர்களாலும் (கிறிஸ்தவ பாதிரியார்கள்) கடுமையான மதமாற்றக் கிருத்தவ முயற்சிகள்.

சைவர்களை இவ்வாறு அழிக்கவும் ஒழிக்கவும் முயல்கின்ற கிறிஸத்தவ அமைப்புகளைக் கண்டித்து பேரணிகள் போராட்டங்கள் நடத்த தெரியாதவர்கள் வேதம் ஓதுகிறார்கள் கடவுளர்களகவா? சாத்தானகளாகவா?

தமிழர்களை இன அழிப்பை செய்வது இந்து கோயில் வளாகங்களில் அடாவடியாக நடக்கும்ஆக்கிரமிப்பு செயல்களில் பௌத்தமும் கிறிஸ்தவமும் மாறுபட்டது அல்ல; ஒட்டிப்பிறந்த இரட்டைகுழந்தைகள்.

கிறிஸ்தவப் பாதிரிகளின் தமிழர்களுக்கு ஆதரவு ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை கொண்டகதை!

பௌத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஒருங்கிணையும் கிறிஸ்தவ பாதிரி பொதுமக்கள் திருச்சபைகள் இந்து சைவத் திருக்கோயில்கள் மீதானகிறிஸ்தவ சபைகளின் அடாத செயலுக்கு எதிராக போராடாதது ஏன் ? கண்டிக்காதது ஏன்?

அன்பின் பெயரால் கிறிஸ்தவமும், அமைதியின் பெயரால் பௌத்தமும், இந்துத் தமிழர்கள் இன அழிப்பு ; இந்து அடையாள அழிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்து தமிழர்களின் நிலையோ கொதிக்கும் சுடுநீருக்கு பயந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் விழுவது போல் இருக்கிறது!

இந்து தமிழர்களின் இன அழிப்பில் இரு முகங்களாக விளங்கும் பௌத்தமும் கிறிஸ்தவமும் ஆபத்தானது என ஒவ்வொரு இந்து தமிழனும் உணரவேண்டும்.

  • இராம .இரவிக்குமார் , நிறுவன தலைவர் இந்து தமிழர் கட்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version