― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஅடடே…! நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்!

அடடே…! நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்!

- Advertisement -

நித்தியானந்தா தனித்தீவு வாங்கியதாகவும் ஈக்வடார் உதவியதாகவும் வந்த செய்திகள் உண்மை யில்லை என்று அந்நாட்டு தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

இவர் மீது, சிறுவர் சிறுமியரை கட்டாயப் படுத்தி அடைத்து வைத்திருத்தல், பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட புகார்கள் உள்ளன. இதன் அடிப்படையில் குஜராத் போலீஸார் நித்யானந்தாவைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஹிந்துக்களுக்கென தனி நாடு ஒன்றை நித்யானந்தா உருவாக்கியிருப்பதாகவும், அதற்கு ‘கைலாஷ்’ என்று பெயர் சூட்டியிருப்பதாகவும், அங்கே போய் தாம் வசிக்கப் போவதாகவும் நித்யானந்தா கூறியதாகவும் தகவல் வெளியானது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே தனித் தீவு ஒன்றை நித்யானந்தா வாங்கியிருப்பதாகவும், அதை தனிநாடாக மாற்றும் திட்டத்தில் இறங்கியிருப்பதாகவும் கூறப் பட்டது. அதற்கு ஏற்ப, கைலாஷா என்ற வெப் சைட் அவரால் நடத்தப் பட்டது. அதில், தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், தேசிய பறவை, விலங்கு, கொடி, அமைச்சரவை என பல்வேறு தகவல்கள் அதில் தெரிவிக்கப் பட்டிருந்தன. kailaasa.org என்ற அந்த இணையதளத்தில், தன் நாட்டுக்கு வர விருப்பம் உள்ளவர்களுக்கு என்று பதிவு செய்ய ஏற்பாடும் செய்யப் பட்டது.

இருப்பினும், இன்று ஈக்வடார் நாட்டு தூதரகம் வெளியிட்ட செய்தியில், நித்யானந்தாவின் அடைக்கல கோரிக்கையை ஈக்வடார் மறுத்துவிட்டதாகவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் “அவர் ஹைதி தீவில் மறைந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

தில்லியில் உள்ள ஈக்வடார் தூதரகம் வெளியிட்ட இந்த அறிக்கையில், நித்யானந்தாவின் சர்வதேச தனிப்பட்ட பாதுகாப்பு (அடைக்கலம்) கோரிக்கையை ஈக்வடார் மறுத்து விட்டதாகக் கூறியுள்ளது.

மேலும், நித்யானந்தாவுக்கு “ஈக்வடார் நாடு தஞ்சமளித்துள்ளது அல்லது ஈக்வடார் அருகே உள்ள எந்தவொரு நிலத்தையும் தீவையும் வாங்குவதற்கு ஈக்வடார் அரசு உதவி செய்துள்ளது” என்று வெளியாகக் கூடிய செய்திகளில் உண்மையில்லை என்று கூறி, இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

1 / 9

The Embassy of Ecuador categorically denies the statement, wherever published, that self styled Guru Nithyananda was given asylum by Ecuador or has been helped by the government of Ecuador in purchasing any land or island in South America near or far from Ecuador. Moreover, Ecuador denied the request for international personal protection (refuge) made by Mr. Nithyananda before Ecuador and later on, Mr. Nithyananda left Ecuador presumably on his way to Haiti. All the information, whatever, which is published in digital and print media in India, is based on the information which allegedly has been sourced from https://kailaasa.org, a website which is supposedly maintained by Mr. Nithyananda or by his people, henceforth all digital or print media houses should refrain from citing Ecuador in any form in all pieces of information related to Mr. Nithyananda.

[poll id =”28″]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version