இந்தியாவின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்… கருணாநிதி மறைவுக்கு மோடி இரங்கல்!

Published:

modi karunanithi3 - 2026புது தில்லி: திமுக, தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுச் செய்தி துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சிறந்த சிந்தனாவாதியை, மக்கள் தலைவரை, சிறந்த எழுத்தாளரை, ஏழைகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்தவரை நாம் இழந்துவிட்டோம்.

modi karunanithi - 2026

தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதை உறுதி செய்தவர். தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர். மாநில நலனுக்காவும் தேசத்தின் உயர்வுக்காகவும் முன் நின்றவர்.

கருணாநிதியுடன் நான் பலமுறை உரையாடியிருக்கிறேன். சமூக நலன் குறித்த கொள்கை முடிவுகளை புரிந்து கொண்டு செயலாற்றுபவர். ஜனநாயகவாதி. நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது செயல்பாடுகள் நினைவு கூரப்படும்.

modi karunanithi2 - 2026

அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் எண்ணற்ற தொண்டர்கள், கருணாநிதி ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் என் நினைவுகள் உள்ளன. இந்தியா, குறிப்பாக தமிழகம் அவரை மிகவும் இழந்து தவிக்கிறது. அவரது ஆன்மா அமைதி பெறட்டும்…

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

– என்று தன் இரங்கல் குறிப்பில் தனது டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் மோடி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img