கட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

04 July26 Rahul Gandhi - 2026

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாகவை வீழ்த்தவேண்டுமென்று தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்த ராகுல் காந்தி தற்போது ஹைதராபாதில் முகாமிட்டுள்ளார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என நம்புவதாகக் கூறிய ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,  தான் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்து கொண்டதாகக் கூறினார்.

இதை விட அதிர்ச்சி தரத் தக்க ஒரு பதிலை அவர் கூறியதுதான் செய்தியாளர்களிடம் நகைப்பை வரவழைத்தது. தெலங்கானாவில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும், ஒரே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமே தெலங்கானா அரசியலில் நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார் ராகுல்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.