இந்தியாவில் எம்.பிக்கள் 4 ஆண்டுகளில் பெற்ற ஊதியம் ரூ.1997 கோடியா?

Published:

03 Oct 03 Pariliment - 2026

எம்.பிக்களுக்கு 4 கடந்த ஆண்டுகளில் ரூ.1997 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் சந்திரசேகர் கெளட் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்திடம் தகவலை கேட்டு அறிந்தார். இதற்கான பதிலை வழங்கிய மக்களவை செயலகம், மக்களவையில் 545 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 245 எம்.பிக்களும் உள்ளனர்.

இதில் மக்களவை எம்.பிக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூ. 1,584 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு எம்.பிகளுக்கும் தலா ரூ.71.29 லட்சம் ஊதியம் மற்றும் சலுகையாக வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலங்களவை எம்.பிக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ஊதியம் மற்றும் சலுகைகளாக ரூ. 443 கோடி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு எம்.பிகளுக்கும் தலா ரூ.44.33 லட்சம் ஊதியம் மற்றும் சலுகையாக அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img