ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்.ஜி.ஓ., அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

amnesty international - 2026

பெங்களூரில் உள்ள ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை குறித்து தெரிவித்த அதிகாரிகள், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அந்நியச் செலாவணி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இடங்களில் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. லண்டனை மையமாகக் கொண்ட என்ஜிஓ நிறுவனமான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், உலகம் முழுவதும் 150 நாடுகளில் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தொண்டு நிறுவனமாக செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் இந்த நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை பயன்படுத்தி அதனை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி வருவதாக அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ.36 கோடி வெளிநாட்டு நிதியை உள்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதியின்றி அது பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை எழுப்பப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதும், தொடர்ந்து தேச துரோக வழக்குப் பதிவானதும் நினைவுகூரத் தக்கது. வேறு எந்த ஒரு நாட்டிலும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக எந்த ஒரு நிறுவனமும் செயல்பட முடியாது என்பதும், அம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் சொர்க்க பூமியாகவும் எளிய இலக்காகவும் மதசார்பற்ற ஜனநாயக இந்தியா  திகழ்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்நிலையில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சோதனை நடத்தப் பட்டதை மனித உரிமை மீறல் எனவும், இந்திய அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த நிறுவனம் உலகளாவிய அளவில் விஷமப் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.