சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

Published:

ponnar sp yatheesh - 2026

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.

சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் பி யதீஸ் சந்திராவினார் தடுத்து நிறுத்தப் பட்டார். மேலும் அவரிடம் மரியாதைக் குறைவாகவும் வரம்பு மீறியும் விவாதம் நடத்தினார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை யதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக கேரளாவில் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் யதீஷ் சந்திரா எந்த தவறும் செய்யவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்

எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சபரிமலையின் பாதுகாப்புப் பணி போடப்பட்டிருந்து. இந்த நிலையில் அவர் மீது எதிர்ப்பு வலுத்ததால் அவரை சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து மாற்றப்பட்டு மீண்டும் திருச்சூருக்கு திரும்ப கேரள அரசு உத்தரவிட்டது

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

நாளை கேரள சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் ராதாகிருஷ்ணனை எஸ்பி அவமதித்தது தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்ப வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக அரசு முன்கூட்டியே எஸ்பி.,யை மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு பத்தரை மணி அளவில் திடீரென பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி நாமஜெபம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு உள்ள இந்த இடத்தில் நாமஜபம் நடத்தக்கூடாது என்று போலீசார் பக்தர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பினர். இதை அடுத்து நாம ஜபத்தில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்து பம்பைக்கு அழைத்துச் சென்றனர்

நாம ஜபம் செய்பவர்களை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியும், உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி நாம ஜபத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பம்பை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பக்தர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img