tenmark 1 e1562926012126 - 2026டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி என்பவருக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மல்கித் சிங் என்பவருக்கும் சமூக வலைதளத்தின் மூலம் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல நாட்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ள நிலையில் டென்மார்க் பெண்ணிற்கு மல்கித் சிங் என்பவரை பிடித்துப்போய் உள்ளது. இந்நிலையில் நடாசா நடாலி தன் காதலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.drug 1 e1562926337449 - 2026

மல்கித் சிங் தன்னைப்பற்றி நடாசா நடாலியிடம்  தான் போதை மருந்துகள் அடிமை ஆகியுள்ளதால் யாரும் தனக்கு வேலை கொடுக்கவில்லை எனவும் பெற்றோர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போதை மருந்துக்கு அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார்.  அவரது கள்ளங்கபடமற்ற மனதை உணர்ந்த நடாசா நடாலி அவரை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

இதையடுத்து இந்தியாவிற்கு வந்த நடாசா நடாலி பெற்றோர்கள் ஒப்புதலுடன் மல்கித் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.அவரை போதை பழக்கத்திலிருந்து விடுபட போதிய சிகிச்சையை அளித்து  அவரை அதிலிருந்து விடுபட செய்தார். இதையடுத்து மல்கித் சிங் தற்போது டென்மார்க் செல்ல விசா எடுக்க போவட்தாகத் தெரிகிறது.

இதையடுத்து அவரை தனது சொந்த நாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு தனியே தொழில் தொடங்க எனது பெற்றோர்கள் உதவி செய்வார்கள் என டென்மார்க்கைச் சேர்ந்த நடாசா நடாலி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending