ஆற்றில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுவன்! நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்!

சற்றுமுன் தமிழகம்
river

கட்டளை காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன், நீச்சல் தெரியமால் நீரில் முழ்கி இறந்து விட்டான்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, கட்டளையை சேர்ந்த ரஜினி மகன் ரித்விக், 9, கரூர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

நேற்று மாலை, 3:00 மணிக்கு மூன்று நண்பர்களுடன் கட்டளை காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், ரித்விக் மட்டும் நீச்சல் தெரியாமல் நீரிழ் மூழ்கி விட்டான்.

மற்ற சிறுவர்கள் பெற்றோரிடம் தகவல் அளித்தனர். அதன்படி, தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி தேடினர்.

மாலை, 5:30 மணிக்கு இறந்து போன ரித்விக் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மாயனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.