பெட்ரோல் நிரப்புதலை முறைப்படுத்த கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன்

மதுரை:

பெட்ரோல் நிரப்புதலை முறைப்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க
உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

பெட்ரோல் நிரப்புவதில் பங்க்குகள் முறைகேடு செய்வதாக முத்துக்குமார் என்பவர்
வழக்கு தொடர்ந்தார். பெட்ரோல் அளவு மற்றும் தரத்தினை நிர்ணயம் செய்ய
உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசு மற்றும்
காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.