― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்புதிய கவுன்சிலர்கள் மார்ச்.2இல் பதவியேற்பு..

புதிய கவுன்சிலர்கள் மார்ச்.2இல் பதவியேற்பு..

நகர்ப்புற உள்ளாட்சி‌ தேர்தலில்
வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் மார் 2ல் பதவி ஏற்கிறார்கள். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற 1,369 உறுப்பினர்களுக்கு அந்தந்த மாநகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பார்கள். இதற்கான பதவி ஏற்பு விழா மார்ச் 2காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

வார்டு வாரியாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மாநகராட்சி கமி‌ஷனர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.

இதே போல நகராட்சிகளில் வெற்றி பெற்ற 3,824 உறுப்பினர்களுக்கு அந்தந்த நகராட்சி கமி‌ஷனர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்கள். பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 7,408 உறுப்பினர்கள் செயல் அலுவலர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது.

புதிய உறுப்பினர்கள் மேயர் தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக செய்து வருகின்றன.

மேயர், துணை மேயர் இருக்கைகள், உறுப்பினர்கள் இருக்கைகள், அவர்களின் அறைகள் போன்றவை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதுப்பொலிவுடன் உள்ளாட்சி அலுவலகங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டதும் அடுத்த கட்டமாக மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ல் நடைபெறுகிறது.

21 மேயர்கள், துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மேயர், துணை மேயர்களை தேர்வு செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழகத்திலேயே 200 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சியாக சென்னை உள்ளது. 200 உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமன்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

15 மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்த உள்ளாட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் 50 சதவீத பெண்கள் இடம் பெறுகிறார்கள்.
புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கு நாளை மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version