― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மேலே ஏறி புரளும் முதலை! வைரல் வீடியோ!

மேலே ஏறி புரளும் முதலை! வைரல் வீடியோ!

Crocodile

முதலை மிகவும் கொடூரமான விலங்காக கருதப்பட்டாலும், அது பெரும்பாலும் தண்ணீரில் இருப்பதால் முதலைகளுடனான மனிதர்களின் தொடர்பு குறைவுதான்.

தற்செயலாக வெளியே வந்தாலும், சக்திவாய்ந்த முதலையின் கிடுக்கிப்பிடியில் சிக்கினால், சின்னாபின்னமாக வேண்டியது தான். ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் கண்களையே நம்பமுடியவில்லை.

வீடியோவில், முதலை ஒன்று ஒருவரை ஆலிங்கனம் செய்துக் கொண்டிருக்கும் காட்சி, அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒன்றாக ஏற்படுத்துகிறது.

மிகவும் பெரிய அளவில் இருக்கும் முதலையை பார்த்தால் பிரமாண்டமாக இருக்கிறது. முதலையின் வடிவத்தைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது.

ஆனால் அந்த முதலையின் நட்பான அரவணைப்பைப் பார்த்து சமூக வலைதளவாசிகள் சிரிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

வைரலாகும் வீடியோவில் ஒரு மனிதன் தரையில் படுத்திருப்பதை காணலாம். ஊர்ந்து வரும் பிரம்மாண்டமான முதலை, அந்த நபரின் மேல் ஏறுகிறது. அந்த நபர் மிகவும் இயல்பாக முதலையைத் தழுவிக்கொண்டிருந்தார். அந்த மனிதன் முதலைக்கு சிறிதும் பயப்படவில்லை என்பதும் வீடியோவில் தெரிகிறது.

jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ (Viral Video of Crocodile) பகிரப்பட்டுள்ளது. இதனுடன், பயனர், ‘When Darth gator wants to be the BiG BOY and play’ என்று எழுதியுள்ளார். வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நபரை பாராட்டுகின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பற்றி ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த ஆக்கிரமிப்பு இன விலங்குகளிடமிருந்து மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்’ என்று எழுதினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version