― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கூழையார் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் ..

கூழையார் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் ..

சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் இன்று கடலில் விடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக 15572 ஆமை குஞ்சுகள் கடலில் விடபட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது.பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இந்த பொறிப்பகத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.
அரிய வகை ஆமை இனமான ஆலிவ் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும்.

இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும். ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும் தன்மையுடையது .இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் பொறித்த ஆமை குஞ்சுகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் வனச்சரகர் டேனியல் அகியோர் இனைந்து கடலில் விடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 32000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்த 2200 ஆமைகுஞ்சுகள் இன்று கடலில் விடப்பட்டது .அரியவகை இனமான ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து கடலில் விட்டனர்.இதுவரை மூன்று கட்டங்களாக 15572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது.இன்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற் பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

IMG 20220329 WA0055

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version