வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்: நினைவு தூணுக்கு இன்று மரியாதை

23 July09 Vellor sippai kalakam - 2026இன்றைக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நள்ளிரவு இப்புரட்சி நடந்தது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்ட நாள். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி நடத்தினர். ஆனால் அதற்கு ‘வேலூர் சிப்பாய் கலகம்’ என்றே வரலாற்றில் பதிவு செய்தனர். இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் வித்து இந்த புரட்சி தான் என்பதை வீரசாவர்க்கர் உட்பட பலர் உணர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இந்த போராட்டத்தை ‘வேலூர் சிப்பாய் புரட்சி’ என்றே அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

1805ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஆண்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், இந்தியப்படை வீரர்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறை மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிய வேண்டும் என்பதும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 1,500 படை வீரர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

இப்படியாக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதுவும் இந்திய சிப்பாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806ம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நள்ளிரவு உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரை கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர், இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய படைகள் கர்னல் கில்லஸ்பி தலைமையில் ஆற்காட்டில் இருந்து விரைந்து வந்து சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.

இந்த புரட்சியில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புரட்சியினால் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும். இந்த சிப்பாய் புரட்சியில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்றும் நிறுவப்பட்டது. 2006ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின் இரு நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில், வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க வேலூர் சிப்பாய் புரட்சியை நினைவுகூறும் வகையில் நாளை சிப்பாய் புரட்சி தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி வேலூர் மக்கானில் அமைக்கப்பட்டுள்ள சிப்பாய்புரட்சி நினைவு தூணுக்கு மரியாதை செய்யப்படுகிறது. புரட்சியின் மூலம் தேசத்தின் விடுதலை வேட்கையை சுதந்திரப்போராட்டத்தை தங்களின் இன்னுயிர் தந்து தொடங்கி வைத்த நமது வீரர்களின் நினைவை போற்றுவோம்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories