தேனி எம்.பி.,யாக ஓபிஎஸ் மகனை தேர்வு செய்த ஆலய நிர்வாகம்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

IMG 20190517 WA0005 - 2026

தேர்தல் முடிவு வரும் முன் எம்.பி.யானார் ரவீந்திரநாத். அவரை எம்பி.யாக தேர்வு செய்து ஆலய நிர்வாகம் கல்வெட்டில் அவரது பெயரை பொறித்து வைத்தது.

*க்ஷதமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து, மே 23ஆம் தேதிதான் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இன்னும் வாக்குகள் எண்ணப்படவில்லை, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். அதாவது, ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது.

காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16ஆம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஒருவேளை கோயில் கல்வெட்டில் பெயரையும் குறித்து வைத்தால் கடவுள் கிருபையில் ரவீந்திரநாத் எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என்று யாரேனும் யோசனையை தெரிவித்தார்களோ என்னவோ ரவீந்திரநாத் பெயரை கல்வெட்டில் செதுக்கி ஆலய வளாகத்தில் வெறுமனே வைத்திருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.