கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!

 
திருப்பூர் அருகே கடந்த 14ம் தேதி மூன்று, 3 கண்டெய்னர் லாரிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று (மே 17) காலை 5.30 மணிக்கு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
காவல் துணை ஆணையாளர் தங்கவேல் தலைமையிலான காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; ஒவ்வொரு நடவடிக்கையும்,காணொளி பதிவு செய்யப்பட்டது.
 
சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
பிடிபட்ட ரூ.570 கோடி முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
 
மேலும் வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து ஏன் முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்?
 
இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய ரூபாய் 570 கோடி சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கீழ் கூறபட்டுள்ள கேள்விகள் எழுந்து பெரும் விவாதமாகி உள்ளது.
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
பிடிபட்ட 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது வரை ஏன் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை ?
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்கள் அனைவரும் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் எனும் பொதுமக்கள் கோரிக்கையும் வலுத்துள்ளது.
 
இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று பிடிபட்ட 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
 
 
 
ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories