‘சும்மா’ முன்னேற்றக் கழகம்! ஆப்பசைத்த குரங்கான தினகரன்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

ttvdinakaran - 2026

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளை  விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது… என்பதுதான் இப்போது அதிகம் அலசப் படும் செய்தியாக உள்ளது.

அதிமுக.,வின் வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்ட தினகரன், அதிமுக.,வில் உள்ளவர்களையே தன் பக்கம் இழுத்து, ஸ்லீப்பர் செல்லாக உழைப்பதற்கு தயார் செய்திருந்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே, அதிமுக., வாக்குகள் குறைந்து, திமுக., கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே நேரம், தினகரனோ, இரண்டாவது மூன்றாவது இடத்துக்கு வருவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் பல தொகுதிகளில் அவர் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

அவரது செயல்பாடுகளால், ஆளும் அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த முடிந்துள்ளது. தனக்கும் இடம் கிடைக்காமல், அதிமுக.,வுக்கும் வெற்றி பெற வைக்க இயலாமல் தட்டிப் பறித்து ஆப்பசைத்த குரங்கு வேலை பார்த்திருக்கிறார் டிடிவி தினகரன் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.