![லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சோளம் மசாலா ரைஸ்! 1 Corn Spice Rice](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/Corn-Spice-Rice.jpg)
சோளம் மசாலா ரைஸ்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
உதிர்த்த சோளம் – ஒரு கப்,
பச்சைப் பட்டாணி – ஒரு கப்,
முந்திரி துண்டு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் கடுகு, சீரகத்தை வெடிக்க விடவும். பிறகு, சோளம், பட்டாணி, அரிசி, மிளகாய்த்தூள், சாம்பார் பொடி, கரம்மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். நன்கு வதங்கியதும், 5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். 3 விசில் வந்ததும், வெந்த சாத கலவையைக் கடாயில் கொட்டி எலுமிச்சை சாறு, வறுத்த முந்திரி, மல்லித்தழை, சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கிளறி, தயிருடன் பரிமாறவும்.