― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

  • ஜெயஸ்ரீ எம். சாரி

ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி அகில உலக கவிஞர்கள் குழுமமும், ஒடியாவில் இருந்து இயங்கும் இங்க் ட்யூ பப்ளிகேஷனும் இணைந்து சமீபத்தில் நடத்திய கவிஞர்கள் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் கவிஞர்கள் பங்குகொண்டு கொண்டனர். கவிஞர்கள் பல மொழிகளிலும் தங்கள் கவிதைகளை வாசித்தது இலக்கியத்திற்கு ஒரு மகுடம் சூட்டுவதாய் இருந்தது.

டாக்டர் குமுத் பாலா, காவிய காமுதி குழுமத்தின் தலைவர், தன் தொடக்க உரையில் “இந்தக் குழுமமானது இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு சாதனமாக விளங்கியும், பல்வேறு மொழிகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும், அனைத்து மொழிகளையும் பிரபல படுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கின்றது. இந்தக் குழுமத்தில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு கவிஞர்களை உறுப்பினர்களாக உள்ளனர். மொத்தம் 39 இந்திய மொழிகளையும் 27 அயல்நாட்டு மொழிகளையும் இணைக்கும் பாலமாக இந்தக் குழுமம் உள்ளது. இங்க் ட்யூவின் மனோஜ் கிஷோர் நாயக் அவர்களின் ஒத்துழைப்பினால் காவிய காமுதியின் காலாந்திர காவ்ய தொகுப்பு வெளியிட முடிந்தது,”‘ என்றார்.

காவிய காமுதி குழுமத்தின் தலைமை ஆலோசகரான ‘டக்லைன்” அலாபட்டி தன் உரையில் “ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, ஒரு உச்சரிப்பு வகை உள்ளது.மேலும் பல மொழிகளை இந்தக் குழுமத்துடன் இணைக்க உள்ளோம்,” என்றார். அவர் தமிழ் மூதாட்டி அவ்வையாரின் ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதனை குறிப்பிட்டு புதிது புதிதாக கற்பதின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார்.

ஐந்து அமர்வுகளில் நடந்த கவிஞர்கள் சபையை எஸ் பி மஹாலிங்கேஸ்வரர், மண்டல செயலாளர், தென்னக மண்டல அலுவலகம், கேந்திரிய சாகித்ய அகாடமி, பெங்களூர், தொடங்கி வைத்தார். உதய்ஸ்ரீ, சாரதா சாய், ரமணி, டாக்டர் தீபிகா மற்றும் லக்ஷ்மி காயத்ரி ஆகியோர் பக்தி பாடல்களை அவரவர்கள் கலந்துகொண்ட அமர்வுகளில் பாடினர்.

பாலச்சந்தர் நாயர் (திருவனந்தபுரம்), லதாப்ரேம் சாகியா ( கேரளா), டாக்டர் பிரபா மஜும்தார் (அகமதாபாத்), உதயகுமார் (ஹைதராபாத்), டாக்டர் கே ஸ்ரீகாந்த் (மசூலிப்பட்டினம்), டாக்டர் மொய்லி ஜோசப் (கேரளா), டாக்டர் பூனம் நிகாம் சகாய் (ராஞ்சி), குல்னார் ரஹீம் கான் (சென்னை), டாக்டர் தீனதயாம் படையாட்சி (டர்பன்), டாக்டர் மரியா டோ சமேரியா (போர்ச்சுகல்), புஷ்மயோத்தி சுப்ருன் (மொரிஷியஸ்), டாக்டர் பிஎஸ் ஸ்ரீதரன் (கேரளா) கலீப்பதா கோஷ் (மேற்கு வங்காளம்) மற்றும் பீஸ்மா உபரேதி (நேபால்) ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகவம், சிறப்பு விருந்தினர்களாகவும் ஐந்து அமர்வுகளாக கலந்துக் கொண்டனர்.

சுமார் 80க்கும் மேற்பட்ட கவிஞர்கள் தங்கள் கவிதைகளால் உலக மொழிகளை எல்லாம் அறிமுகப்படுத்தியும், உலக இலக்கியத்திற்கு ஒரு பாலமாக தத்தம் மொழிகளையும் சேர்த்தனர். ராஜீவ் முத்தேடத், டாக்டர் கவிதா சிங், சபிதா சாஹு, மஹுவா சென் மற்றும் சுதா குமாரி ஜுஹி ஆகியோர் முறையே ஐந்து அமர்வுகளில் நன்றியுரை வழங்கினர். டாக்டர் குமுத் பாலா அனத்து அமர்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version