Home இலக்கியம் கவிதைகள் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – உண்மை
சொல்வதற்கே வந்ததிங்கு பஞ்சம்!

தமிழெங்கள் உயிரென்று சொல்வான் – பிழையின்றித்
தமிழ்பேச விழிபிதுங்கி சாவான்

தமிழுக்குத் தொண்டென்று சொல்வான் – தமிழ்பேசின்
தண்டிக்கும் பள்ளித் தாளாளன்

தேசத்தைப் பெரிதென்று எண்ணான் – போலி
வேஷத்தால் நேசன்போல் நடிப்பான்

பாமரர் அரசென்று மொழிவான் – கெட்ட
வாரிசு அரசியல் வளர்ப்பான்

மக்களின் ஆட்சியென் றுரைப்பான் – தம்குடும்ப
மக்களுக்காய் பலரை அழிப்பான்

ஒன்றிய அரசென்றே அழைப்பான் – தேசத்தில்
ஒன்றாமல் பிரிவினை வளர்ப்பான்

சமத்துவ நீதியெனப் பகர்வான் – பகிர்வில்
சமத்துவம் பேணாமல் நகர்வான்

சாதிகளை ஒழிப்போமே என்பான் – தேர்தலில்
சாதிகளை வாக்குக்காய் வளைப்பான்

மதங்களைச் சாராதோன் என்பான் – அன்னிய
மதங்களைச் சார்ந்தேதான் வளர்ப்பான்.

சாமிசிலை வணக்கத்தை எதிர்ப்பான் – கெட்ட
ஆசாமி சிலைவைத்தே துதிப்பான்.

~ கவிதை: பத்மன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version