
காந்தி சிலைக்கு கதராடை, சந்தனமாலை அணிவித்து துப்புரவு பணி செய்த பா. ஜ. க வினர்.
மதுரை காந்தி பொட்டலில் உள்ள காந்தி சிலைக்கு, மதுரை மாநகர் மாவட்ட பா. ஜ. க. தலைவர் மகாசுசீந்திரன் தலைமையிலும், மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு, சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர் வக்கீல் முத்துக்குமார், சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர். சாம்சரவணன், கூட்டுறவு பிரிவு மாநிலச்
செயலாளர். பாஸ்கரன் முன்னிலையிலும், நிர்வாகிகள் வடமலையான், செல்விகிருஷ்ணன், சிவகுமார், முருகேஷ்பாண்டி, மணவாளன், கார்த்திகேயன், சிவசக்தி, மணிமாறன், மாணிக்கம் ஆகியோர் கதராடை சந்தனமாலை அணிவித்து மரியாதை செலுத்தி, துப்புரவு பணி செய்தனர்.