‘தெரியாது’ என்ற பதிலை சொல்வதற்கு ஒரு 182…!

Reporters Diary புகார் பெட்டி
railwaysecurityhelp - 2026

ரயில்வே பாதுகாப்பு படை, அவசர உதவிக்கு அழைக்க 182 என்ற எண் கொடுத்துள்ளார்கள்.

நேற்று மாலை தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நபர் அடிபட்டு விபத்து. இது தொடர்பாக அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படை ஆர்பிஎஃப், தமிழ்நாடு ரயில்வே பாதுக்காப்பு படை என அனைவரையும் தொடர்பு கொண்ட போது உரிய தகவல் கிடைக்கவில்லை! எதுவும் தெரியாது என்றே பதில் கிடைத்தது-

நேரடியாக எனது நண்பர்கள், செய்தியாளர்கள் என நானே தொடர்பு கொண்டேன். அதைத் தொடர்ந்து தென்காசி SpCid, உளவுத்துறை காவலர்களிடம் விசாரித்ததில் விபத்தில் சிக்கிய நபர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல் கிடைத்தது.

இப்படி இருந்தால் பொது மக்களாகிய நாங்கள் 182 என்ற எண்ணுக்கு எப்படி தொடர்பு கொள்வது? எங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்குமா? இவர்களை நம்பி நாங்கள் எப்படி பயணிப்பது?.

முன்னதாக இது தொடர்பான தகவலைப் பெற செய்தியாளர் என்ற வகையில் நட்புடன் பழகிய செங்கோட்டை முன்னாள் ஆர்பிஎஃப் எஸ்.ஐ., ஆனந்த்தை தொடர்பு கொண்ட போது அவர் சில எண்கள் கொடுத்தார். அவற்றைத் தொடர்பு கொண்ட போதும் சரியான தகவல்கள் பெற இயலவில்லை! செய்தியாளர்களுக்கே இந்த கதி என்றால்… பொதுமக்கள்?!

  • தென்காசி செய்தியாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.