Home Blog Page 5434

சடங்கின் போது ஏன் பூணூலை இடம்வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா.

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.

ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:

கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ‘ தென்புலத்தார் ‘ என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்….. ‘ உத்தராயணம் ‘ என்பதில் மூன்று சுழி ‘ ண ‘ போட்டும், ‘ தக்ஷிணாயனம் ‘ என்னும்போது இரண்டு சுழி ‘ ன ‘ என்பது ‘ ண ‘ வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.

” பிரதக்ஷணம் பண்ணுவது ” என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.

இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின் போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம் தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப் போட்டுக் கொள்கிறார்கள்.

தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு மேல் பூணூல் இருப்பதற்கு ‘ யக்ஞோபவீதம் ‘ என்றும், பித்ரு காரியத்தின் போது வலது தோளுக்கு மேல் இருப்பதற்கு ‘ ப்ராசீனாவீதம் ‘ என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள் செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை மாதிரித் தொங்குவதற்கு ‘ நிவீதம் ‘ என்றும் பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு ஞானி இந்த எல்லாத் தினுஸுக் கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி வருகிறது. ( III.5.1) . அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே க்ருஹஸ்தனுக்குப் பூணூல் இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல் கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக் காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில், ” நிவீதம் மநுஷ்யாணாம் ” – மநுஷ்யர்களுக்கான காரியத்தின்போது (பூணூலை) மாலையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக் காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில் பலகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப் போயிருக்கிறது.

பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை திடீர் ரத்து

சென்னை:
இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் வருகை பாதுகாப்புக் காரணங்களுக்காக திடீரென ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.
பிரணாப் முகர்ஜி வரும் 24ஆம் தேதி காஞ்சீபுரம் செல்வதாக இருந்தது. வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்வார் என்றும், பின் ஏனாத்தூரில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தியை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடையே உரையாற்றுவார் என்றும் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படையினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில்களில் பாதுகாப்பு மற்றும் முன் ஏற்பாடுப் பணிகளை கடந்த சில நாட்களாக மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் காஞ்சிபுரம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுத்தப்பட்ட்டன.

காஞ்சிபுரத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ள காரணத்தால் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், நாளை ஊட்டி செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு லவ்டேல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்கி, புதன் கிழமை காலை ஊட்டி தாவரவியல் பூங்காவுக்குச் சென்று பார்வையிடுகிறார். பின் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் திரும்பி, தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.

ரஜினி வரக்கூடாது: எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. தமிழர் முன்னேற்றப் படையினர் எனும் அமைப்பினர் இன்று காலை ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அந்த அமைப்பினர் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினியின் உருவபொம்மையை எரித்து, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லி, ரஜினிக்கு எதிராக கோஷங்கள் இட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பு பேசிக் கொண்டிருக்க, அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இது குறித்து தனது பேச்சில் குறிப்பிட்ட் ரஜினி காந்த், சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம் குறித்து வருந்துவதாகக் கூறினார்.

சமாதானப் பேச்சு நடந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும்: அதற்குள் ராஜீவ் கொலையானார்: கண்கலங்கிய ப.சிதம்பரம்!

சென்னை:
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கும்; ஆனால், அதற்குள் அவரைப் படுகொலை செய்துவிட்டார்கள் என்று ராஜீவ் நினைவு தினத்தில் கண்கலங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் வருடந்தோறும் மே 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராஜீவ் நினைவு தினம் நாடு முழுதும் கடைபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், ராஜீவ் குறித்த நினைவுகளைக் கூறி கண்கலங்கிப் பேசினார். “மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி உள்ளிட்டோர் சமாதான தூதுவர்களாக இருந்ததால் கொல்லப்பட்டனர். ராஜீவும் அவ்வாறு இருந்ததால் போராளிகள் சிலரால் கொல்லப்பட்டார். சமாதான பேச்சுவார்த்தை நடந்திருந்தால் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை, மொழி உரிமை, சம குடியுரிமை உள்ளிட்டவை கிடைத்திருக்கும். ஆனால் அதற்குள் அவர் கொலை செய்யப்பட்டு விட்டார். அவர் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகளை சிலர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று பேசினார் ப.சிதம்பரம்.

முன்னதாக, தில்லியில் உள்ள வீர பூமியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: இன்று விசாரணை

புது தில்லி:

அத்வானி உள்ளிட்டோர் மீதான அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீதான, அயோத்தி சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு விசாரணை, லக்னௌவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் திங்கட் கிழமை இன்று மீண்டும் தொடங்குகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் கடந்த 1992 டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கர சேவகர்களுக்கு எதிராக லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், குற்றச் சதியில் ஈடுபட்டதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உ.பி. முன்னாள் முதல்வரும், தற்போதைய ராஜஸ்தான் ஆளுநருமான கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது ரேபரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை கடந்த 2001-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்தது.

இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றங்களில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னௌ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.

அத்துடன் இந்த வழக்கில் ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி 2 ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இதற்காக இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை லக்னௌ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

முன்னதாக வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட முன்னாள் எம்.பி. வேதாந்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களான கண்பத் ராய், வைகுந்த் லால் சர்மா உள்ளிட்ட 5 பேர் லக்னோ நீதிமன்றத்தில் சரணடைந்து உடனடி ஜாமீன் பெற்றனர். அதுபோல் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் ஜாமீன் பெற வேண்டும். கல்யாண் சிங் தற்போது ஆளுநராக இருப்பதால், அவர் அப்பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வருடம் சுதந்திரமா இருந்தாச்சு; இனி சிறைக்குச் செல்லலாம்: கிரிமினல்களுக்கு யோகி ஆதித்யநாத் பதில்

லக்னௌ:
15 வருசமா சுதந்திரமாக இருந்துவிட்டீர்கள், இனி சிறைக்குச் செல்லத் தயாராகுங்கள் என்று கூறியுள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் ஞாயிற்றுக் கிழமை நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், கிரிமினல்களிடம் இரக்கம் காட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என கறாராகத் தெரிவித்தார்.

சட்டத்தை மீறுபவர்கள், அரசியல் ரீதியாக தஞ்சம் அடைந்துகொண்டு மாநிலத்தின் அமைதியைக் குலைப்பவர்களை சட்டத்தின் கையில் ஒப்படைப்பதில் எந்தவிதத்திலும் தயங்கப் போவதில்லை. அரசும் நிர்வாகமும் கண்டிப்புடன் அவர்களைக் கையாளும். கடந்த 15 வருடங்களாக சிலர் சுதந்திரமாக நினைத்தபடி இருந்துவிட்டனர். அவர்கள் ஒரு நாளில் தங்களை மாற்றிக் கொள்ள இயலாது. அவர்கள் இப்போதும் கூட தங்கள் குணத்தை சில பகுதிகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள். விவசாயிகளை மற்றவர்கள் சுரண்ட அனுமதிக்க மாட்டேன். விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், நல்ல விலைக்கு வாங்கப்பட வேண்டும். என்று பேசினார் யோகி ஆதித்யநாத்.

ஜிஎஸ்டி.,க்கு எதிர்ப்பு: மே 30ல் உணவகங்கள் மூடல்!

சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப் படவுள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் விலைவாசியில் மாற்றம் ஏற்படும். உணவகங்களில் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படும். ஏசி.,யுடன் கூடிய உணவகங்களில் விலை அதிகமாகும். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உணவகங்களின் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, ‘ஜிஎஸ்டி., வரி விதிப்பினால் உணவுகளின் விலை கடுமையாக உயரும். மத்திய அரசு இதனைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராக மே 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் கடை அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆலோசித்து தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கும் புதிய சேட்டிலைட்


நிலநடுக்கம், கடல் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே
அறியும் வகையில், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிசார் என்ற புதிய
செயற்கைக்கோளை உருவாக்கி வருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி
மையமான நாசாவுடன் இணைந்து முதன் முறையாக செயற்கைகோளை உருவாக்கும் முயற்சியில்
ஈடுப்பட்டு வருகிறது.

நாசா- இஸ்ரோ சிந்தடி அபர்ச்சர் ராடார் என்ற இந்த செயற்கோள் மூலம் பூமியில்
ஏற்படும் நிலநடுக்கம், கடல்மட்டம் அதிகரிப்பு, எரிமலை சீற்றம் உள்ளிட்ட இயற்கை
சீற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக அறிய முடியும்.

இந்த செயற்கைகோள் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது.
இந்த செயற்கைகோள்
வரும் 2021-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

“என் வாயைப் பார்த்தியோ?”: பெரியவா


​”என் வாயைப் பார்த்தியோ?”–பெரியவா
“உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது…ஏன் தெரியுமா?”
“நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா….அதான்!”(பக்தர் வைத்த படையல்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(அலுக்காத சம்பவம்-வேற ஆசிரியர் கட்டுரை) திருச்சியில் ஒரு பக்தர். புகைப்படக்காரர்.சிறிய ஸ்டூடியோ வைத்திருந்தார்.வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு படையலை மகாபெரியவர் முன்
வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். பெரியவாளின் நாமத்தை
அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா,ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம்.வெயில் கடுமையாக கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த இந்தப் புகைப்படக் கலைஞருக்கு ‘பெரியவாளைத் தரிசிக்க
வேண்டும்’ என்று மனதில் ஆசை வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும் முன்,வழக்கம்போல்
பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்!

கர்னூலில் அளவுக்கு அதிகமாக பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.நமது புகைப்பட நிபுணர் எந்த பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை.சற்று தூரத்தில் இருந்த மணற்குவியல் ஒன்றின் மீது ஏறி நின்று மகாபெரியவாளைத் தரிசிக்க முயன்றார்.

வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது.கும்பல்குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார்.இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம்.

சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார்.யாரோ அவரைக் கூப்பிடுவது போல் தோன்றவே,
திரும்பிப் பார்த்தார்.

ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார். “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க?”

“ஆமாம்!” “பெரியவா உங்களை அழைச்சுண்டு வரச் சொன்னார்!”

“என்னையா!” – பக்தருக்கு வியப்பு! “நீங்க போட்டோகிராபர்தானே”

“ஆமாம்” “அப்படியென்றால் வாருங்கள்…”

விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு போய் பெரியவா முன் நிறுத்தினார் சிஷ்யர்.
கைகளைக் கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்படநிபுணர் தன்னை
மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு
தூரம் கிளம்பி வந்திருக்கே.. கடைசியிலே பார்க்காமலேயே போனா என்னப்பா அர்த்தம்?” என்றார்.

கும்பல் நிறைய இருந்தது…அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு…” என்று
தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.

சில விநாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார்; “என் வாயைப் பார்த்தியோ?”
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டதுபோல் சிவந்திருக்கிறது! பிறகு
கேட்டார்,”உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது…ஏன் தெரியுமா?”

புகைப்பட நிபுணருக்குப் புரியவில்லை.

“நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா….அதான்!”

அப்போதுதான் தான் வைத்த படையல் ஞாபகத்துக்கு வந்தது. சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மகாபிரபு, என்னை மன்னியுங்கள்!” என்று கதறினார்.

எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால், மகாபிரபு அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள் அது சாத்வீகமான பக்தி! ஆண்டவனே,நீதான் எனக்கு எல்லாம் என்று மனதார நினைக்கும் பக்தி. ”

நியூஸு ப்ரேக்கிங்: எப்டி பிரேக்குறது?

ஏ என்னப்பா… எதுனா டாப் நியூஸ் இருக்கா. இன்னும் ஹிட்ஸ் ரீச் ஆவல! எதுனா இருக்கான்னு தேடு…

சரி சார்.. இப்ப ஆஜ்தக்ல அமித் ஷா பேசிட்டிருக்காராம்…

சரி சரி நல்லா பாரு… எதாவது தேறுமான்னு பாக்கலாம்…

சார் ஏதோ ப்ரசிடென்ட் எலக்சன் பத்தி ப்ரேக் பண்றாங்க.. இன்னும் நாங்க கேண்டிடேட் செலக்ட் பண்ணலன்றாராம்….. … நாம அப்போ. அத்வானிக்கு கல்தாவா? அத்வானிய ஜனாதிபதியாக வரவிடாமல் செய்ய மோடி அமித்ஷா கூட்டு சதின்னு ஹெட்டிங் போட்டு நியூஸ ப்ரேக் பண்ணட்டா…! இல்லன்னா அத்வானிக்கு துரோகமிழைக்கும் மோடி! ; வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததுன்னு எதுனா செண்டிமெண்டா போடட்டா…!?

இல்ல வெய்ட் பண்ணு வேற எதுனா சொல்றாரா பார்ப்போம்..

சார் .. ஆமா சார்.. ரஜினி பத்தி ஏதோ சொல்றாரு….

என்ன சொல்றாரு கவனி….

ரஜினி முடிவு அவர் கைலன்றாரு…

இல்ல.. இல்ல.. என்ன சொல்றாங்க… நல்லா பாரு.

To a question on whether Tamil superstar Rajinikant is likely to join the BJP, Mr Shah said that the decision has to be taken by the actor himself, and that his party welcomed all good people to its fold… அப்டின்னு ஏஜென்ஸி நியூஸ் சார்.

சூப்பர்.. சூப்பர்… ரஜினிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கு: அமித் ஷா ஓபனாக அழைக்கிறார்னு ஹெட்லைன் போடு…

சார் ஆனா அவரு அப்டி சொல்லலையே!

யே.. நியூஸ மத்தவன் படிக்கணுமா வேணாமா? சொல்றத செய்…

ஆனா சார்… இங்லீஷ் சைட்ல அப்டி போடலியே…! He also welcomed reports of actor Rajinikanth’s foray into politics while speaking at the India Today Editors’ Roundtable. “From our end, every good person is open to joining politics,” he said. — அப்டின்னு போட்டிருக்காங்க…

இதோ பாரு… ரஜினிக்காக வெத்தல பாக்கு வெச்சி வீட்டுக் கதவ தட்டி வாங்க வாங்கன்னு நாங்க கையைப் பிடிச்சி தரதரன்னு பிஜேபி ஆபீஸ்க்கு இழுத்துட்டு வர ஆள்லாம் செட் பண்ணி வெச்சிருக்கோம். அவரு மட்டும் கண்ணசரட்டும்..ன்னு கூட எழுது. எவன் கேக்க போறான்…!  பேஸ்புக் டிவிட்டர்னு எல்லாம் ஒரே வைரலா போக வேணாமா? எல்லாம் நாம வெக்கிற தலைப்பை மட்டும்தான் படிச்சி விவாதிப்பான் தெரிஞ்சுதா…? ஒருத்தனும் நியூஸு உள்ளே போய் படிக்க மாட்டான். அதனால… உள்ளே அதை எல்லாம் எழுது. தலைப்பை மட்டும் கேச்சியா போடு… புரிஞ்சுதா?

சரி சார்.. இப்போதைக்கு பாஜக கதவு திறந்திருக்கு: அமித் ஷா அழைப்புன்னு போட்டுக்கறேன் சார்…

வெரி குட்!

Exit mobile version