― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஓமிக்கிரானின் புது மாறுபாடு.. குழந்தைகள் கவனம்..! ஆய்வில் அதிர்ச்சி!

ஓமிக்கிரானின் புது மாறுபாடு.. குழந்தைகள் கவனம்..! ஆய்வில் அதிர்ச்சி!

omicron

கொரோனாவின் டெல்டாவின் மாறுபாட்டை விட தற்போது ஓமிக்ரான் பாதிப்பு ஐந்து மடங்கு அதிகமாக குழந்தைகளை குறிப்பாக தடுப்பூசி செலுத்தாத 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், 2 மாதங்களுக்குள் உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது.

ஏற்கெனவே மக்களை பாதித்துவந்த டெல்டா வைரஸை ஓரங்கட்டி, தற்போது ஒமைக்ரான் வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்தான் புதிய கொரோனா மாறுபாட்டு வைரஸ் இரண்டு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து தேவையில்லாமல் கவலைப்படவில்லை அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு துணை வகைகளான BA.1 மற்றும் BA.2 இணைந்து இந்த மாறுபாடு உருவாகியுள்ளதாகவும், இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளிடம் PCR சோதனையின் போது இது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாறுபாடு குழந்தைகளிடையே கடுமையான இருமல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்ற உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகள் பொதுவாக லேசான நோயை அனுபவித்தாலும், ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாடு சமீபத்திய மாதங்களில் டெல்டா மாறுபாட்டை விட ஐந்து மடங்கு அதிக விகிதத்தில் கொரோனாவை விட அதிகமான குழந்தைகளை மருத்துவமனையில் சேர்க்க வழிவகுத்துள்ளது.

ஆய்வில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் ஐந்துக்கும் குறைவானவர்கள் அல்லது தடுப்பூசி போடப்படாதவர்கள் என்ற தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் தற்போதைய ஓமிக்ரான் அலையானது மற்ற எல்லா கொரோனா வகைகளையும் விட அதிக தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது எனவும், இது குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை, பல இளம் குழந்தைகள் கடுமையான “குரூப்” பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 75 புதிய குரூப் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் முதன்முறையாக இதுபோன்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது

கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட சப்க்ளோட்டிக் காற்றுப்பாதை வீக்கத்தால் ஏற்படுகிறது. குரூப் என்பது திடீரென ஏற்படும் இருமல் , மூச்சை உள்ளிழுக்கும் போது கடும் சிரமம், சுவாசக் கோளாறு ஆகியவற்றால் ஏற்படுகிறது.

SARS-CoV-2 என புதிய மாறுபாடு உருவாகியுள்ளதால், குழந்தைகளின் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆரம்பகால மாறுபாடுகள் பொதுவாக குறைந்த சுவாச நோய்த்தொற்றுகளை விளைவித்த நிலையில், சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரான் மாறுபாடு கடும் சுவாச பிரச்சினைகளை உருவாக்கலாம் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version