கேரளத்தில் ஜனம் டிவி., அலுவலகங்கள் மீது கம்யூனிஸ்ட் குண்டர்கள் தாக்குதல்!

Published:

cpm cyber commune - 2026

கேரளத்தில் ஜனம் டி.வி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் இடதுசாரி கம்யூனிஸ்ட் குண்டர்கள் !

இந்நிலையில், பத்திரிகைச் சுதந்திரம் , கருத்துச் சுதந்திரம் பற்றி பொங்குபவர்கள் வாய் திறக்காதது ஏன்? என்று சமூக வலைத்தளங்களில் இடதுசாரி கம்யூனிஸ்ட்  ஆதரவு ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர் பலர். 

கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக கைரளி என்ற டிவி சேனலை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் என தமிழகத்தைப் போல், ஊடக மாஃபியாக்கள் வலம் வரும் நிலையில், உண்மையை எடுத்துரைக்க சிலரால் தொடங்கப் பட்டது ஜனம் டிவி., ஒளிபரப்பைத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே நடுநிலையாளர்கள், பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் ஆதரவைப் பெற்று பேசப் பட்டு வருகிறது. 

இந்நிலையில், சபரிமலையில் நடைபெறும் போராட்ட நிகழ்வுகளை கடந்த மாதமும் சரி, நேற்றைய நடை திறப்பு நாளில் இருந்தும் சரி.. தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இது கேரள கம்யூனிஸ அரசை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஊடக மாஃபியா உலகில் இருப்பவர்கள் இடதுசாரிகள் அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும் என்ற எழுதப் படாத விதியை மீறி செயல்படும் ஜனம் டிவி., ஊடகத்தின் மீது மோசமான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது ஆளும் கம்யூனிஸ்ட். 

மேலும், ஜனம் டிவி.,யின் பெயரில் பொய்யான தகவல்களை போட்டோஷாப் செய்து கம்யூனிஸ்ட்கள் வெளியிடுவதாக ஜனம் டிவி புகார் தெரிவித்துள்ளது. ஜனம் டிவி லோகோவுடன் பொய்த் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிவருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இஷான் திலீப் என்பவர் இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறியுள்ள ஜனம் டிவி., இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்று கூறியுள்ளது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இதை அடுத்து சைபர் பிரிவில் ஒரு புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதில், பொய்யான செய்திகளை பரப்பி, அதில் ஜனம் டிவியின் லோகோவை பயன்படுத்துவதாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

முன்னர், சபரிமலைக்குச் செல்ல முயன்ற ரஹேனா பாத்திமா என்ற பெண்ணின் கணவர் ஜனம் டிவியில் பணி புரிபவர் என்ற பொய்யை சிபிஎம் தொண்டர்கள் பரப்பி விட்டனர் என்றும், தற்போது, ஜனம் டிவியின் நற்பெயரைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அது தெரிவித்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img