― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்பெரியவாளும் மனுஷா தானே... என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்!

பெரியவாளும் மனுஷா தானே… என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்!

மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியா வரும்! 61824767 699403060494343 2086571481210290176 n

“பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணமே நடந்த அதிசயம்”

–நன்றி-தினமணி-16-02-2018

 

ஒரு நாள் சங்கர மடத்தில் மகா பெரியவாளுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. சுருண்டு படுத்துக்கொண்டு, கைகளால் அடி வயிற்றைப் பிசைந்து பிசைந்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் துடிதுடித்துப் போயினர்.

அங்கிருந்த ஒருவர், ‘மகா பெரியவாளுக்குக் கூடவா இப்படியெல்லாம் வரும்! எங்களாலே தாங்க முடியலையே’ என்று கதறி அழுதார்.

மகா பெரியவாளும் மனுஷா தானே. கர்மாவாலே தான் இந்த உடம்பு வந்திருக்கு. அதற்குண்டான பலாபலன்களை இந்தச் சரீரம் அனுபவித்து தானே ஆகணும்’ என்று கூறினார். சற்று நேரத்தில் வலி குறைந்து தெளிவடைந்தார் பெரியவா.

அங்கிருந்த மடத்து யானை பெயர் காமாட்சி. தீப நமஸ்காரம் முடிந்து மகா பெரியவாளிடம் வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட வந்தது. மகா பெரியவா ஒரு குடிலில் அமர்ந்திருந்தார். பழத்தை கையில் வைத்துக் கொண்டு யானையை உள்ளே அழைத்தார். ஆனால், சிறுவாசலில் அத்தனை பெரிய சரீரம் எப்படி நுழைய முடியும். யானைப் பாகனும் யோசித்தபடி நின்றிருந்தார்.

பெரியவா விடாமல், ‘காமாட்சி, உள்ளே வந்து வாங்கிக்கோ’ என்று மீண்டும் அழைத்தார். அடுத்த கணம் நம்பமுடியாத அதிசயம் நிகழ்ந்தது. அந்தப் பெரிய யானை தன் உடலை மிகவும் அழகாகச் சுருக்கிக் கொண்டு அந்தக் குறுகிய வாசற்படியில் நுழைந்து, பெரியவாளிடம் பழத்தைப் பெற்றுக் கொண்டு, பின்னால் நகர்ந்த படியே வெளியே வந்தது.

‘பெரியவாளும் மனுஷா தானே’ என்று பெரியவா கூறிய அடுத்த கணம் இந்த அதிசயம் நிகழ்ந்தது! என்னே அவரது திருவிளையாடல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version