― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?-பெரியவா!

ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?-பெரியவா!

“ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”-பெரியவா

(பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனை அணைத்து, பரம ஹிதத்தை குடுத்தது)

பாட்டிகள் மஹாத்மியம் தலைப்பில் இன்று-பட்டுப் பாட்டி

62049358 894495094236897 3477664543176392704 n 4
complied & penned by gowri sukumar.
(பல புத்தகங்களின் தொகுப்பு)

அனுமதியோடு-வரகூரான் நாராயணன்

கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி, பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.

பெரியவா ஸதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள்.

அப்போது நல்ல குளிர்காலம்!

ஒருநாள் காலை, தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்…

”இந்தா… பாலு! இந்தக் கம்பிளிய கொண்டு போயி, பட்டுப் பாட்டிட்ட குடு”

“ஸெரி……”

வாங்கிக் கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.

நள்ளிரவாகிவிட்டது!

பெரியவா படுத்துக் கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!

“பாலு!……”

பெரியவாளின் மதுரக்குரல் கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்….

“ஏண்டா… பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”

“ஆஹா! மறந்தே போய்ட்டேனே!…

தூக்கிவாரிப் போட்டது!

“இல்ல பெரியவா…… மறந்தே போய்ட்டேன்”

பெற்றவளுக்கு மட்டுந்தான், தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய வெளித் தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல், எப்போதுமே குழந்தையாகவே பார்க்க முடியும்!

“ஸெரி…. இப்போவே போயி, அவ.. எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா”

“இந்த நடுராத்ரிலயா? குளுரான குளுரு! எங்க போய் பாட்டிய தேடறது?….. காலம்பற குடுத்துடறேனே பெரியவா!…

தெய்வக் குழந்தை அடம் பிடித்தது!

“இல்ல..! இப்பவே குடுத்தாகணும்! என்னடா… நீ?… ராத்ரிலதான குளிர் ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!”

கம்பிளியை எடுத்துக் கொண்டு, அந்த அர்த்த ராத்ரியில் வீடுவீடாக அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் மிதித்து விடாமல், உற்று உற்று பார்த்து, கடைஸியில், கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!

“பாட்டி! ….பாலு…..”

“ம்…என்னப்பா?….என்ன வேணும்?..”

தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது…. பாலு அண்ணா சொன்னது…

..

“பெரியவா…. இந்தக் கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி, காலமேயே சொன்னா! மறந்தே போய்ட்டேன்! பெரியவா, இப்போ ஞாபகமா கேட்டா! குடுக்கல-ன்னதும், ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச் சொன்னா! இந்தாங்கோ..”

“பெரியவாளா!!…..என்னப்பனே! இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!…

பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு ஏதாவது அளவு இருக்குமா என்ன? கதகதப்பான கண்ணீரோடு, கம்பிளிக்குள் முடங்கினாள்.

பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனை அணைத்து, பரம ஹிதத்தை குடுத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version