மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களை

Published:

“பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களைப் படிக்க அந்த மகானால் முடியும்” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒருமுறை மகான் மதுரை அருகே முகாமிட்டிருந்த சமயம். மகானைத் தரிசிக்க பக்தர்களின் கூட்டம்37061_10151356031212617_107367148_n_zpsb19955ed அலை மோதியது. நாராயணசாமி என்றொரு பக்தர் தன் நண்பருடன், அந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்கப் போயிருந்தார். கையில் அவ்வளவு பண வசதி இல்லாதவர்.கொஞ்சமாகத்தான் எடுத்துக் கொண்டு போயிருந்தார். அவர் ஒரு சம்சாரி. எந்தச் செலவு என்றாலும் அளவோடு தான் செலவு செய்ய முடியும்? மகானைத் தரிசிக்க வந்ததில் நண்பருக்கும், அவருக்கும் பணம் பஸ்கட்டணத்திற்கே சரியாகப் போய்விட்டது.மகானைத் தரிசித்தோம் என்கிற ஆனந்தத்திற்குப் பதிலாக, திரும்பவும் ஊர்ப் போய்ச் சேர கையில் காசில்லையே என்கிற கவலைதான் அவரை அதிகமாக ஆட்கொண்டது. மகானிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு எப்படி ஊர் திரும்புவது என்ற விசனத்தோடு, அவர் வெளியே வெகு தூரம் வந்துவிட்டார். அவரது பின்னால் ஓடிவந்த ஒருவர், அவரை மகான் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.நாராயணசாமி அய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய பக்தர்கள் கூட்டத்தில் தன்னை மட்டும் மகான் குறிப்பிட்டு அழைப்பானேன். மனதில் குழப்பத்துடன் பெரியவாளின் முன்பு நின்றார். “பாவம் நீ சம்சாரி, இதை வச்சுக்கோ” என்று ஐந்து ரூபாயை மகான் கொடுத்தபோது சாட்சாத் சுந்தரேஸ்வரரே தன் கஷ்ட நிவர்த்திக்கு பணம் கொடுத்து அருளுவது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களைப் படிக்க அந்த மகானால் முடியும் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இதைப் போன்ற அருள் சுரக்கும் பரமேஸ்வரரைத் தரிசித்து வணங்கினால் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவது சாத்தியமே

Related articles

Recent articles

spot_img