― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்' (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

‘எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்’ (தோஷம் நீங்க பெரியவா சொன்ன பரிகாரம்)

(கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?”)

​(தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும் செலுத்தும்
பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்டகருணை,மகாபெரியவாளைத் தவிர வேறு
யாருக்கு இருக்கும்?)

”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)
தொகுப்பு-சாருகேசி
‘நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
புத்தகம்-காமகோடி பெரியவா.

காஞ்சி மகா பெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி
வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்பநலனையும்
எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு,வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், சாஸ்திரத்தை
மீறிவிட்டோமோ’ என்கிற உறுத்தல்,பக்தரை வாட்டியது.தனது மனக்கலக்கத்துக்கு
மருந்தாக…மகா பெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்.

ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச செய்தார்.
குடும்பத்தாரைப் பர்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு
காஞ்சிமகானைத் தரிசிக்க போகிறோம் என்கிற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம்
சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம்பேசிக்கண்டிருந்தார்
மகா பெரியவா. தரசனத்துக்காக வந்திருந்தஅடியவரகளுக்குவியப்பு
.’சமையல்’இன்னின்னமாதிரியெல்லம்இருக்க
வேண்டும்என்பதுமுதறகொண்டுபெரியவாசிரத்தைஎடுத்துக்கொள்கிறாரே? இதுவரை
இப்படியல்லாம் சொன்னது கிடையாதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். மகாபெரியவாளைக்
கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா,
சிப்பந்திகளைஅழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படிபெரியவா
சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால்,கடல் கடந்து தன்
பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடிவந்துவிட்டான். எனில்,
அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத்தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகாபெரியவாளுக்கு எதிரில் வந்து
நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா,

”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும்
கரிசனமும்பொங்க.. அதைக்
கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்துவார்த்தைகளே வரவில்லை!
‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்;
கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்றுஆரம்பித்தார்…
”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கேபுறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும்
எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு
சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப்
பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில்,
அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச்
சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த
மற்றஅன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே
வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு
சொல்லுங்கோ”என்று கேட்டாராம்

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைஅளித்தது. ஏனெனில், எவரிடமும்
‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்றுஎதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில்
சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டுமுடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார்
அந்த பக்தர்! அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன்
பார்த்தமகாபெரியவா,

”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமேசொல்லலையே…” என்று
கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல்இலையையும்
எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்குநிகரான காஞ்சி
மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில்
கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்றுதவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே
கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர்,
”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்டஇருக்கற
பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும்ஆசைப்படறார். ஆனா
கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம்
தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை
நோகவிட்டுடமுடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும்
தொடர்ந்துபேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர ர்எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிறபசு
மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிறபாலை எனக்குக்
கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா,இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப்
பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு
மாட்டு வழியாவந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர்மனசுல
நெனச்சபடி,எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான்ஏத்துண்ட மாதிரியும்
ஆச்சு. இல்லையா?” என்றா விளக்கம் சொல்வதுபோல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும்
செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்டகருணை,மகாபெரியவாளைத் தவிர
வேறு யாருக்கு இருக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version