தரங்கிணி தந்த தீர்த்தர்

narayana-theertharநாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். கோவிந்த சாஸ்த்ருலு என்பது அவரின் இயற்பெயர். பின்னர் அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சாவூர் நோக்கி இடம்பெயர்ந்தனர். சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள சான்றுகளின் படி அவருடைய காலம் 1650-1745 எனக் கொள்ளலாம். அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தார். இசையை இளவயதிலேயே நன்றாக கற்றார். பாகவத புராணம், மற்ற புராணங்களை நன்றாகக் கற்றறிந்து இருந்தார். சம்ஸ்கிருத மொழி நன்கு கற்றிருந்தார். மிக இளவயதிலேயே வாழ்க்கையைத் துறந்து ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் தத்துவங்களை போதிக்க காசிக்குச் சென்றார். நாட்டியக்கலை மற்றும் இசையில் அதிக ஈடுபாடு இருந்தமையால், அவருக்கு 34 வெவ்வேறு வகையான ராகங்கள் தெரியும். மிக அதிகமாக, த்ரிபுட, ஆதி, ரூபக, சாபு, சம்பா, மத்ய, விளம்ப, ஏகா மற்றும் அட தாளங்களைப் பயன்படுத்தினார். நிர்த்ய மற்றும் நாட்டிய பதங்களுக்கு எளிதான நேரான பாடல்களைப் பயன்படுத்தினார். கடினமான பதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். அவருடைய கத்யங்கள் மிக அழகானவை. அனுஷ்டுப், ஆர்யா, இந்த்ரவஜ்ரா, புஜங்கப்ரயடம், சர்துலவிக்ரீட்தம்,வசந்த திலக ப்ரித்வி போன்ற 17 வகையான சந்தஸ்களைப் பயன்படுத்தினார். 15 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை சரஸ்வதி மஹால் தஞ்சாவூர் மற்றும் காசி பல்கலைக்கழக நூலகங்களில் கிடைக்கின்றன. பாரிஜாத அபஹர்ணம் மற்றும் ஹரிபக்தி சுன்டர்ணவம் என்று இரு நாடகங்களையும் இயற்றியுள்ளார். நாராயண தீர்த்தர் 1745 ல் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருப்புந்துருத்தி என்ற கிராமத்தில் ஒரு பெரிய மாமரத்தின் அடியில்.மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரம் சுக்ல அஷ்டமி நாளில் இறந்தார். அவர் உயிருடனே என்று சொல்லப்படும் “ஜீவ” சமாதி அடைந்தார் என்று சொல்லுபவர்களும் உள்ளனர். அவரைப் பற்றி மற்றோர் தகவல். குருவின் ஆணைக்கு இணங்க போதேந்திர சுவாமிகளைப் சந்திக்க கோவிந்தபுரம் பயணிக்கிறார். ஆனால் இவர் செல்வதற்கு சில மாதங்கள் முன்பாகவே அவர் சமாதி அடைந்து விட்டார் என்பதைக் கேள்விபட்டு கோவிந்தபுரத்திலேயே சில நாட்கள் தங்கிவிட்டு, தாங்க முடியாத வயிற்று வலியுடன், காவிரிக்கரையின் ஓரமாக உள்ள பல ஊர்களையும் பார்த்துவிட்டு திருவையாறு வந்தடைகிறார். நடுக்காவிரி என்ற கிராமத்தை அடையும்போது வயிற்றுவலி அதிகமாகி அருகில் உள்ள விநாயகர் கோயிலில் தூங்குகிறார். ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் கிருஷ்ணன் வந்து, “காலையில் நீ விழித்தெழும் போத ஒரு மிருகத்தைப் பார்ப்பாய், அதைத் தொடர்ந்து சென்றால் உன்னுடைய வயிற்று வலி காணாமல் போகும்” என்று கூறுகிறார். அதே போல, காலையில் விழித்தெழும் போது, ஒரு பன்றியைப் பார்க்கிறார். கிருஷ்ணன் கனவில் சொன்னது ஞாபகம் வர, அதே சமயத்தில் பன்றியைப் பார்ப்பது நல்ல சகுனம் இல்லை என நினைத்து, சிறிது நேரம் தயங்கிடுகிறார். ஆனால் கிருஷ்ணன் ஆணையை மீறமுடியாமல், பன்றியைத் தொடர்ந்து சுமார் 4 கிலோமீட்டர் தொடர்ந்து சென்று களைத்து விடுகிறார். திடிரென்று அந்தப் பன்றியும் அருகில் உள்ள கோயிலின் உள்ளே சென்று மறைந்து விடுகிறது அதே நேரத்தில் நாராயண தீர்த்தர் வானில் இருந்து, “நான் தான் உன்னை அழைத்து வந்துள்ளேன்,” என்று ஒரு சத்தம் கேட்கிறார். அதைக் கேட்ட நாராயண தீர்த்தரும் மிக்க மகிழ்ச்சி டைகிறார். அவருக்கும் வயிற்றி வலி திடிரென்று மறைந்து விடுகிறது. அதுவரை “பூபதிராஜபுரம்” என்று பெயர் கொண்ட ஊர், “வரகூர்” என்று பெயர் பெறுகிறது, ஏனெனில் சமஸ்கிருதத்தில்,”வரஹா” என்றால் பன்றி எனப்படும். நாராயண தீர்த்தர் வரகூர் கிராமத்தில் பல காலம் தங்கி,பல சம்ஸ்கிருத மொழியில் பல பாடல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமாது “தரங்கிணி” ஆகும். அதனைப் பாடும்போது ருக்மிணி, ராதா இவர்களுடன் கிருஷ்ணன் நடனம் ஆடுவதும், அதற்கான சதங்கை ஒலி நாராயண தீர்த்தருக்கு கேட்டாதாகவும் சொல்லுவார்கள். விசவருப தரிசனம் கண்ட நாராயண தீர்த்தர் தேவ சமாதி அடைத்தார் என்று சொல்வார்கள்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories