― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவிளையாட்டுT20-WC: விறுவிறுப்பான லீக் சுற்று முதல் கட்ட ஆட்டங்கள்; அதிர்ச்சி அளித்த அணிகள்!

T20-WC: விறுவிறுப்பான லீக் சுற்று முதல் கட்ட ஆட்டங்கள்; அதிர்ச்சி அளித்த அணிகள்!

t20 worldcup
#image_title

டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் – லீக் சுற்று – 05 ஜூன் முதல் 10 ஜூன் வரை

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

அட்டவணை

(10 ஜூன் வரை)

குரூப் Aகுரூப் Bகுரூப் Cகுரூப் D
இந்தியா – 4 அமெரிக்கா ஐக்கிய நாடுகள் – 4 கனடா – 2 பாகிஸ்தான், அயர்லாந்து 0  ஸ்காட்லாந்து 5 ஆஸ்திரேலியா 4 நமீபியா 2 இங்கிலாந்து 1 ஓமன் 0  ஆப்கானிஸ்தான் 4 மேற்கு இந்தியத் தீவுகள் 4 உகாண்டா 2 பாபுவா நியூகினியா 0 நியூசிலாந்து,  தென் ஆப்பிரிக்கா 4 வங்கதேசம் 2 நெதர்லாந்து 2 நேபாளம் 0  இலங்கை 0

          05 ஜூன் முதல் 10 ஜூன் வரை நடந்த லீக் சுற்று டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் சில எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அணியை அமெரிக்க அணி வென்றதும் ஆஃப்பானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வென்றதும் இலங்கை அணியை வங்கதேச அணி வென்றதும் சில நம்ப முடியாத முடிவுகள். இனி ஒவ்வொரு ஆட்டமாகப் பார்க்கலாம்.

அம்ரிக்க அணி பாகிஸ்தான் அணியை வென்றது

          06.06.2024 அன்று மேற்கு இந்தியத்தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த பாப்புவா நியூ கினியா  (19.1 ஓவரில் 77) உகாண்டா (18.2 ஓவரில் 78/7) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் உகாண்டா அணி 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதே நாள் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை (159/7) அமெரிக்க அணி (159/3) வென்றது. இது ஓர் அதிர்ச்சி முடிவு ஆகும்.

ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்க அணி ஒரு அனுபவ அணியைப் போன்று தன்னுடைய ஓவரில் நன்றாக விளையாடியது. இந்த அணி சூப்பர் ஓவரில் 18 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் அனுபவ பந்துவீச்சாளர் முகம்மது அமீர் ஓவரில் நிறைய வைட்கள் கொடுத்தார். அதற்குப் பின்னர் பாகிஸ்தான் ஆடியபோது அமெரிக்காவின் சௌரப் நேத்ரவால்கர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை ஒரு விக்கட் இழப்பிற்கு 13 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்தார். இதனால் சூப்பர் ஓவரில் அமெரிக்கா வென்றது. .

அதே நாள் பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் நமீபியா அணியை (155/9) ஸ்காட்லாந்து அணி (18.3 ஓவரில் 157/5) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது 

07.06.2024 அன்று நியூயார்க்கில் நடந்த ஆட்டத்தில் கனடா அணி (137/7) அயர்லாந்து அணியை (125/7) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அதே நாள் மே.இ. தீவுகளில் உள்ள  ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில்  ஆஃப்கானிஸ்தான் (159/6) அணி நியூசிலாந்து அணியை (75) 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவும் ஒரு அதிர்ச்சி முடிவாகும். கடந்த உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த அணி, கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதி வரை வந்த அணி, இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படும் அணி ஆஃப்கானிஸ்தானிடம் தோற்றது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி ஆகும்.

          அதே நாளில் பகலிரவு ஆட்டமாக டல்லாஸில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை (124/9) அணியை வங்கதேச அணி (19 ஓவரில் 125/8) இரண்டு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

          08.06.2024 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற நெதர்லாந்து (103/9) அணியை தென் ஆப்பிரிக்கா அணி (18.5 ஓவரில் 106/6) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டம்கூட ஒரு திரில்லர் ரக ஆட்டம்தான். சென்ற முறை நெதர்லாந்து தென் ஆப்பிரிக்க அணியை வென்றிருந்தது. இந்த முறையும் அதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் டேவிட் மில்லரின் நிதானமான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியைப் பெற்றது.

அதே நாள் ப்ரிட்ஜ்டவுனில் நடபெற்ற ஆட்டதில் ஆஸ்திரேலியா அணி (201/7) அதன்  வழமையான எதிரி அணியான இங்கிலாந்து அணியை  (165/6) அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அன்றைய தினம் மே.இ. தீவுகளில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் (173/5) உகாண்டா (39) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியா பாகிஸ்தான் ஆட்டம்

          09.06.2024 அன்று நியூயார்க்கில் இந்தியா (119), பாகிஸ்தான் 113/7) அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில்  இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இந்த ஆட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. தொடக்கத்திலேயே மழையின் குறுக்கீட்டால் டாஸ் தாமதமாக போடப்பட்டது.

பின்னர் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. இந்தியாவின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

          ரிஷப் பந்த் 40 ரன்களும், அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டும் எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும், அமிர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது.

          ஆனாலும் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. இறுதி கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

          அன்றைய தினம் ஆண்டிகுவாவில் உள்ள நார்த் கிரௌண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஓமன் அணியை (150/7) ஸ்காட்லாந்து அணி (153/3) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

10.06.2024 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச (109/7) தென் ஆப்பிரிக்க (113/6) அணிகள் மோதிய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version