ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-ஹாங்காங் இன்று மோதல்

06 Sep14 Asia cup - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் சவாலாக இன்று கத்துக்குட்டி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. பரம எதிரி பாகிஸ்தானை நாளை எதிர்கொள்ள உள்ள இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, ஹாங்காங் அணிகள் மோத உள்ளன. விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

சமீபகாலமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பலமின்றி காணப்படுகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக மிடில் ஆல்டரை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதே போல, ‘தல’ டோனியின் பேட்டிங் செயல்பாடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. உலக கோப்பைக்கு முன்பாக இளம் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மேலும் டோனியை எந்த இடத்தில் களமிறங்குவது என்பதிலும் அணி நிர்வாகம் குழப்பத்திலேயே உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தொடராக ஆசிய கோப்பை அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியிலிருந்தே பரிசோதனை முயற்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி, ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், தவான், மணிஷ் பாண்டே, டோனி, கேதார் ஜாதவ், அம்பாதி ராயுடு, ஹர்திக் பாண்டியா என பலமான பேட்டிங் வரிசை கொண்டுள்ளது.காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், பும்ராவுடன் இணைந்து மீண்டும் பந்துவீச்சை தொடங்க உள்ளார். குல்தீப், சாஹல் சுழல் கூட்டணி பக்கபலமாக உள்ளது. எனவே அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே ஹாங்காங் அணியால் போட்டியின் முடிவை மாற்றி அமைக்க முடியும். அந்த அணி நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்துள்ளது. ஹாங்காங்கால் 116 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியிலிருந்து அடுத்த நாளே ஹாங்காங் மீண்டு வருமா என்பது சந்தேகமே.
இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆட்டமே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். இவ்விரு அணிகளும் மோத உள்ள விறுவிறுப்பான சவால் நாளை நடக்க உள்ள நிலையில், இன்றைய போட்டி இந்திய அணிக்கு பயிற்சி ஆட்டமாகவே கருதப்படுகிறது. நல்ல பார்மில் உள்ள பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ள இந்திய அணி தனது சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories