― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeவிளையாட்டுடெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்த கோலி

டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்த கோலி

05 09 May Kholi

ஆசிய நாடுகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்-கை இந்திய கேப்டன் விராட் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களில் ஆல்-அவுட் ஆனது பின்னர் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், அணியின் கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் கோலி 4,222 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

மேலும், ஆசிய நாடுகளில் கேப்டனாக 4,214 ரன்கள் குவித்து முன்னணியில் இருந்த பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக்-ஐ பின்னுக்கு தள்ளியுள்ளார் இவர்களுக்கு அடுத்த இடங்களில் இலங்கையின் ஜெயவர்த்தனே (3,665 ரன்கள்), இந்தியாவின் டோனி (3,454 ரன்கள்) மற்றும் கவாஸ்கர் (3,449 ஓரன்கள்) உள்ளனர்.

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். அவர் அணித்தலைவராக 8,659 ரன்கள் குவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version