ஸ்பா பெயரில் விபசாரம் – டிக்டாக் புகழ் சூர்யா உட்பட 13 பேர் மீட்பு…

Published:

rowdybabysurya
rowdybabysurya

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு புகழடைந்தவர் சூர்யா. டிக்டாக்கில் ரவுடி பேபி என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த இவர் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பின் அவரை பற்றிய செய்திகள் வெளியாகவில்லை.

இந்நிலையில், திருச்சியில் மசாஜ் செண்டர் என்கிற பெயரில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர்.

surya-tiktok-1
surya-tiktok-1

இந்நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஸ்பா சென்டர்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, டிவிஎஸ் டோல்கேட் அருகேயுள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் உள்ள மசாஜ் செண்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது அங்கு டிக்டாக் புகழ் சூர்யாவும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரோடு சேர்த்து 13 பெண்களை போலீசார் மீட்டனர். அங்கு விபசாரம் நடத்தியதாக ஸ்பா உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img